பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 கின்ற முறையில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கோப்பில் கையெழுத்துப் போட மறுத்து விட்டேன். அதனால் அதை அமைச்சரவை கூட்டத்திலே வைத்து விவாதித்தார். அப்போது நான் அதை எதிர்த்தேன். அதற்குப் பிறகு அவரே ஒரு ஆணையைப் பிறப்பித்து, அந்த விற்பனை வரிச் சலுகையை யாருக்கோ தந்திருக் கிறார்" என்று சொல்லியிருக்கிறார். நிருபர்கள் "அவர் என்றும் சொல்ல எஸ். டி. சோமசுந்தரத்திடம் யாரென்றும், என்ன சலுகை முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்கள். "நான் சொன்ன இந்தக் குற்றச்சாட்டை எம். ஜி. ஆர் மறுப்பாரேயானால் மேற்கொண்டு விவரங்களை நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்" என்று எஸ். டி. சோமசுந்தரம் தெளிவாக கூறியிருக்கிறார். அதற்கு எம். ஜி. ஆர். பதில் சொன்னாரா? ஆனால் அவர் பொதுவாக மண்ணை வாரி இறைக்கிறார். கிராமத்துப் பெண்கள் காளியம்மன் கோவில் வாச லில் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை "மண்ணாய் போக" என்று சொல்லி மண்ணை வாரி இறைப்பார்கள். அதைப் போல எம்.ஜி. ஆர்., எஸ். டி. சோமசுந்தரத்தின் மீது மண்ணை வாரி இறைக்கிறாரே தவிர, விற்பனை வரியில் யாருக்கும் சலுகை தரவில்லை என்றோ, அல்லது எஸ். டி. எஸ். மறுத்து அதை மீறி அந்த இலாகாவுக்கு தெரியாமல் அரசாணை பிறப்பிக்கவில்லை என்றோ, இதுவரை எம்.ஜி.ஆர். மறுத்திருக்கிறாரா என்றால் மறுக்கவில்லை. கேட்டால், "நானே ஒரு ஊழல் விசாரணைக் குழு வைத்திருக்கிறேன்" என்று எம். ஜி. ஆர். சொல்லுவார். குழுவின் தலைவர் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர்.!! ஆண்டு ஒன்றுக்கு காலி சாராய பாட்டிலில் மாத்திரம் இருபத்து நாலு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெறுகிற