பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 தவறாக இருந்தால் என்னை எம். ஜி. ஆர். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா" என்று பேசினேன். உடனே என் மீது வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் தெரியுமா? நீதிபதியிடத்திலே எம்.ஜி.ஆர். சார்பாக அவருடைய வழக்கறிஞர் என்ன சொன்னார் தெரியுமா? நான் பேசிய பேச்சின் காரணமாக எம்.ஜி.ஆரு டைய புகழுக்கும் கௌரவத்திற்கும், அவருடைய கட்சி யிலும், நண்பர்களிடத்திலும் சமுதாயத்திலும் அவருக் கிருந்த செல்வாக்கிற்கு நான் களங்கம் ஏற்படுத்தி விட் டேன். எனவே என் மீது மான நட்ட வழக்கு என்று போட்டு என்னை தண்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத் திலே என் மீது வழக்குப் போட்டார். நான் நீதிமன்றத்துக்கு இரண்டு மூன்று தடவை போனேன். ஆனால் எம். ஜி. ஆர். வரவில்லை. திடீரென்று • எங்களது வழக்கறிஞர் கழக சட்டத்துறை செயலாளர் என். கணபதிக்கு ஒரு கடிதம் வந்தது. சென்னை சிட்டி சிவில் கோர்ட் அரசு வழக்கறிஞர் எஸ். கே. ராசவேலு என்பவரிடமிருந்து அந்த கடிதம் வந்தது. அதில் என்னையும் முரசொலி மாறனையும் குறிப் பிட்டு என்ன சொல்லுகிறார் தெரியுமா? "உங்களுடைய கட்சிக்காரர்களாக (கிளையன்ட்) இருக்கின்ற கருணாநிதிக்கும். முரசொலி மாறனுக்கும் இன்னதேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தால்கூட அவர் கள் ஆஜராக தேவையில்லை." என்ன காரணமென்றால் முதலமைச்சரின் மானம் பறி போகிறது என்றும் கருணாநிதி பேசிய பேச்சு உண்மைக்கு -3