பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 இந்திரா காந்தியைக் கேட்கிறேன்; பாகிஸ்தானில் அதிபர் ஆட்சிதான். யாகியாகான் ஆட்சி. அந்த அதிபர் ஆட்சியிலேதான் சிறுபான்மையாக இருந்தவங்கதேசத்து மக்கள் புரட்சி செய்தார்கள். அதிபர் ஆட்சிமுறையை தாங்கிக்கொள்ள இயலாது என்றார்கள். அதன் விளைவு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் உருவாயிற்று. சொல்கிறேன். அதைத்தான் இந்திரா காந்திக்கு இங்கே இந்தியாவில் அதிபர் ஆட்சி என்றால் இந்தி பேசுகிற மாநில மக்கள்- உத்தரபிரதேசம், மத்தியபிர தேசம், பீகார் ஆகிய மாநில மக்கள் பெரும்பான்மை யானவர்கள் அளிக்கிற வாக்குகளை பெறுபவர்கள் இந்தி யாவில் அதிபராக முடியும். ஆக இந்தி ஆதிக்கக்காரர்கள் வாக்குகளைப் பெறு பவர்தான் இந்தியாவின் அதிபராக முடியும். அப்பொழுது சிறுபான்மையாக இருக்கின்ற தமிழ் பேசுகிறவர்கள் -தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசுபவர்கள் என்ன ஆவது? அந்தக் கேள்வி எழுமேயானால் எப்படி இலங்கை யிலே தமிழன் தனிநாடு வேண்டும் என்று கேட்கிறானோ ; எப்படி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் ஏற் பட்டதோ அதைப் போல இந்தியாவிலே பல தனி நாடு கள், நாட்டுப் பிரிவினைகள் ஏற்படும்; அதிபர் ஆட்சி முறையினால். இந்திராகாந்தி அம்மையார் அவர்களே! இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு சிந்தனை செய்யுங் கள்.