பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

“இந்தியாவிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி அமைப்பு முறை- ஜனநாயகமுறை மாற்றப்பட்டு, ஜனதிபதி ஆட்சிமுறை- ஜனாதிபதி ஆட்சிமுறை என்றால், டெல்லிப் பட்டணத்திலே இருக் கின்ற பெரிய கட்டிடத்திலே அமர்ந்து ஜெயில்சிங் மத்திய அரசின் கைப் பாவையாக இருக்கின்றாரே அதுபோல அல்ல!. இலங்கையில் ஜெயவர்த்தனே இருக்கிறாரே, அது போன்ற ஜனாதிபதியாக, இங்கே இந்திராகாந்தி ஆளத் துடிக்கிறார். இப் போது ஜனாதிபதி ஆட்சி முறை வருவதால், ஜனநாயகத்திற்கு ஆபத்து வராது என்று சொல்லுகிறார்கள். புலி பாய்வதால் குழந்தையின் உடம்பிலே காயம் ஏற்படாது என்று சொன்னால் அது எப்படி, பைத்தியக்காரத்தனமோ-, பாம்பு கடித்தால் விஷம் ஏறாது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-அல்லது மற்றவர்களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ! அதைப் போலத்தான் ஜனாதிபதி ஆட்சி முறை வந்தால் ஜனநாயகத்திற்கு கேடு வராது என்று எடுத்து வைக்கின்ற வாதம்." தலைவர் கலைஞர்