பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய ஜனநாயகம், எங்கே போகிறது? அண்ணா மாவட்ட தி.மு. கழகத்தினுடைய ஆறாவது மாநாட்டில் நேற்றும் இன்றும் கண்கொள்ளாக் காட்சி யாக உங்களையெல்லாம் பார்த்து பரவசமடைந்து என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கின்றேன். இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்று நாங்கள் எண்ணிய போது மாநாட்டை நடத்துகின்ற நண்பர் களுக்குத் தரப்பட்ட அவகாசத்தை சிந்திக்கிற போது இவ்வளவு சிறப்பாக இந்த மாநாடு நடைபெறுமா என்று நாங்கள் எண்ணியது உண்டு. ஆனால் இது வரையில் நடைபெற்றுள்ள மாவட்ட மாநாடுகளையெல்லாம் மிஞ்சுகின்ற அளவிற்கு அண்ணா மாவட்ட தி.மு. கழகத்தினுடைய மாநாடு நேற்றும் இன்றும் எழிலுற எழுச்சியுற நடைபெற்று மாநாட்டின் நிறைவுக் கட்டம்-நான் உங்களையெல்லாம் வழியனுப் புகிற கட்டம் -நீங்களும் எனக்கு விடை கொடுத்து சென்னைக்கு அனுப்புகிற கட்டம் இந்தக் கட்டம். இந்த மாநாட்டின் சிறப்புகளை எனக்கு முன் உரை யாற்றிய கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் மிக விளக்கமாக தன் நீண்ட உரையிலே எடுத்துக் கூறியிருக்கின்றார்.