பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 மாநாட்டுப் பந்தல்- மாநாட்டின் முகப்பு- நாம் அமர்ந்து கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்த மேடை-இந்த அரங்கம் இவைகளெல்லாம் எத் தகைய பெரும் தியாகிகளுடைய பெயரால் அமைந் துள்ளன என்ற விளக்கங்களை அவர் இங்கே அளித் துள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்களோடு பழகி, நமக் கெல்லாம் நெருங்கிய நண்பர்களாக இருந்து கழகப் பணியாற்றி இடம் எதுவானாலும் லட்சியத்தை எள்ள ளவும் விட்டுத் தராமல் பாடுபட்டு பணியாற்றிய மறைந்துவிட்ட மாணிக்கங்களை மறவாமல் அவர் களுடைய பெயரால் நுழைவு வாயில்களும், தோரண வாயில்களும் அமைத்திருக்கிறோம் என்பதையும் பேரா சிரியர் இங்கே எடுத்துக் காட்டியிருக்கின்றார். இந்த மாநாடு நடைபெறுகின்ற இந்த இடத்திற்கு நாம் சூட்டியிருக்கின்ற பெயர் குன்றத்தூர் சம்பந்தம் திடல். 1978ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையாருடைய தமிழக வருகையின் போது அவர்கள் 75ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்திய சர்வாதிகார கொடுமைகளை அவர்களுக்கு நினைவூட்டவும், இனி அந்த கொடுமை கள் நடைபெறக்கூடாது என்பதை அறிவுறுத்தவும் தி.மு.கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தில் அந்தக் கொடி காட்டுகிற பணியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு "இந்திராகாந்தி அவர் களே! சர்வாதிகாரக் கொடுமையில் இந்திய மக்களை சீரழித்தவர்களே! திரும்பிப் போங்கள்" என்று உணர்ச் சிக்குரல் எழுப்பி அந்த உணர்ச்சியின் காரணமாகவே நெஞ்சு வலியால் தாக்கப்பட்டு மரணமடைந்த மாவீரன் தான் குன்றத்தூர் சம்பந்தம்.