பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 அன்றைக்கு நடித்தவர்தான் நமது பேராசிரியர் அவர் கள். அந்த இராவணன் பாத்திரத்தை அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அதை ஏற்று இதே காஞ்சி மண்ணில் என்னை முன்னிலை வகிக்கச் செய்து நடித்துக் காட்டிய மாவீரன் கம்பராஜபுரம் ராஜகோபால். பாத்திரமேற்று நடித்தது மாத்திரமல்ல: இயல்பும் இராவணனது வீர இயல்புதான். ஓராண்டு காலம் வேலூர் சிறைச்சாலையில் மிசாக் கைதியாக இருந்தபோது அவர் எப்படியெல்லாம் அங்கே நடந்து கொண்டார், எந்த அளவுக்கு உறுதியோடு, நெஞ்சுரத்தோடு அந்த சிறைச் சாலையில் அவர் சிங்கமென உலவினார் என்ற நிகழ்ச்சி களை தம்பி துரை முருகனும், வி. எம். தேவராஜ் போன்ற வர்களும் எனக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியிருக் கின்றார்கள். அந்த வீரனுடைய பெயரால்தான் இந்த பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரத்திலே ஜன படுகொலை செய்யப்பட்ட நாயகத்தை உயிர்ப்பிக்க வேண்டுமென்று நாடு முழுதும் குறிப்பாக தமிழகம் தழுவிய போராட்டம் ஒன்றினை நாம் நடத்திய நேரத்தில் குன்றத்தூர் வீதிகளில் கொடி பிடித்து இந்திராகாந்தியின் ஜனநாயகப் படுகொலையை ஊருக் கும் உலகுக்கும் அறிவிக்க தனது மனையாளையும் மக்களை யும் தவிக்க விட்டு விட்டு நம்மையும் கண்ணீர்க்குளத் தில் மிதக்க விட்டுவிட்டு தனக்குத்தானே தணல் மூட்டிக் கொண்டு மாண்ட குன்றத்தூர் ஏகாம்பரம் பெயரால் முகப்பு! அண்ணா அவர்களோடு பழகி அண்ணா அவர்கள் தி.மு.கழகத்தைத் தொடங்கிய நேரத்தில் ஒரு நாளேடு தேவை என்று எண்ணிய நேரத்தில் "நடத்த நானிருக் கிறேன் அண்ணா" என்று முன் வந்து 'மாலைமணி' என்