பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது அதன்பின், சிப்பாய்ப் புரட்சிபற்றி தாமே விரும்பி ஆய்வு நடத்தி, ஓர் அறிக்கையை இந்திய அரசுக்கு அளித்தார். அதிலே, 1857-ல் நடந்தது போன்ற ஆயுதப் புரட்சியானது திரும்பவும் எந்த நேரத்திலும் தோன்றுவ தற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதனை எடுத்துக்கூறி இந்திய அரசை எச்சரித்தார், ஹ்யூம் விடுத்த அறிக்கை தாம் எதிர்பார்த்த இரண்டாவது புரட்சி தோன்று வதைத் தவிர்க்கும் குறிக்கோளுடன் இந்தியர்களை -- குறிப்பாக, ஆங்கிலம் பயின்ற பட்டதாரிகளைத் திருப்தி செய்யத் தேசம் தழுவிய முறையில் ஓர் அமைப்பைத் தோற்றுவிக்க முனைந்தார். அதற்காக, கல்கத்தா பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு' என்ற தலைப்பில் 1.3.1883ல் அவர் வெளிப்படையாக விடுத்த வேண்டு கோள் வருமாறு. நாட்டின் அறிவாளிகள் அவரவர்கள் சுய நலத்திலேயே கண்ணாயிருந்து தாய்நாட்டிற்காகச் சிறிதளவேனும் பாடுபடாமல் இருப்பார்களாயின், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் உரிமையிழந்து அயல் நாட்டினர் அவர்கள் முதுகிலேறிச் சவாரி செய்வார்கள். அதற்கு அவர்கள் முற்றிலும் தகுதியானவர்களே. அவ்விதமாயின், அவர்களுக்குற்ற விதி சரியானதே. எந்த நாட்டினரும் அவரவர் முயற்சியாலான பதவியை மட்டுந்தான் அடைவரன்றோ! உயர் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்று உலக வரலாற்றை அறிந்த உங்களில் சிலராவது சுய