பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பிரதிபலித்து எழுதவும் பேசவும் தொடங்கிய முதல் தலைவர் லோகமான்ய திலகராவார். இதற்காக ஆங்கிலத்தில் மராட்டா' என்னும் பெயரிலும் மராத்தி மொழியில் 'கேசரி என்னும் பெயரிலும் வார இதழ்களை வெளியிட்டு வந்தார். புனாவிலே பிளேக் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் தருவதற்கென்று நியமிக்கப்பட்ட வெள்ளை அதிகாரிகளில் சிலர், மக்களுக்கு இழைத்த கொடுமை களைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியதற்காக 1891-ல் ஒன்றரையாண்டுச் சிறைத் தண்டனை பெற்றார். தமிழகத்திலும் திரு. ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், ஆங்கிலத்தில் "இந்து" என்ற பெயரில் வார இதழைத் தொடங்கி, பின்னர் அதனை நாளிதழாக்கினார். சாதாரண மக்களோடு தொடர்பு கொள்ள விரும்பி “சுதேச மித்திரன்" என்னும் பெயரில் தமிழ் நாளிதழையும் தொடங்கினார். சீர்திருத்தம் எது? இப்படி, இந்திய தேசிய காங்கிரஸ் படுமிதவாதி களின் கைகளில் சிக்கியிருந்த காலத்தில் கூட, அதைச் சார்ந்திருந்த தலைவர்களில் சிலரோ பலரோ சமுதாயச் சீர்திருத்தப் பணியில் கருத்துச் செலுத்தி வந்தனர். மக்களிடையே நிலவிய கல்வியின்மையைப் போக்கு வதே உண்மையான சமுதாயச் சீர்திருத்தப் பணி என்று அவர்கள் நம்பினர்.