பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது "இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை உண்டாகக்கூடும். ஏனென்றால், இவர் தேசம் முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி, மகாராஷ்டிரருக்கு வைதிகப் பிராமணர்களின் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திர ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்தி பெற்றவர். நெடுங் காலமாக இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சி யினாலும், உயர்ந்த மேதையினாலும் நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிக்கிறார். ஹிந்துக்களாகிய நாமெல்லோரும் இவரது உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டாகும். இப்போதுள்ள ஜாதி விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்." (பாரதி நூல்கள் - கட்டுரைகள்; பாரதி பிரசுராலய வெளியீடு; பக். 608) தேசிய காங்கிரசிலே, முடிந்து கொண்டிருந்த மிதவாதிகள் சகாப்தத்திற்கும் தோன்றிக் கொண்டிருந்த காந்திய சகாப்தத்துக்குமான சந்திப்பிலே தேசம் முழுவ தற்கும் அறிமுகமான தேசியத் தலைவர்கள் தோன்றி யிருந்தனர். அவர்களிலே பல்வேறு மதத்தினரு மிருந்தனர். வடபுலத்தவருமிருந்தனர்; தென் புலத்தவரு மிருந்தனர். புதிய சகாப்தம் பொதுவாக, மௌலானா முகமதலி - மௌலானா ஷௌகத் அலி (சகோதரர்கள்), அக்கீம் அஜ்மல்கான்