பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 591 மௌலானா அபுல்கலாம் அசாத், முகமது ரஹிம்துல்லா, சயானி, யாகூப் ஹசன், நவாப் சையத் முகமது ஹாசன் இமாம் ஆகியோருட்பட ஏராளமான இஸ்லாமியத் தலைவர்களும், தாதாபாய் நௌரோஜி, சர். பிரோஸிஷா மேத்தா, டி.ஈ. வாச்சா முதலியோருள்ளிட்ட பார்ஸி கனவான்களும், உமேஷ் சந்திர பானர்ஜி உள்ளிட்ட கிறித்துவத் தலைவர்களும், தாய்க்குலத்தின் சார்பாக அன்னிபெசன்ட், கவியரசி சரோஜினி தேவி ஆகியோரும் இருந்தனர். லோகமான்ய பாலகங்காதர திலகர், சேலம் சி. விசயராகவாச்சாரியார், லாலா லஜபதி ராய், பண்டித மோதிலால் நேரு, தேசபந்து சித்தரஞ்சன தாஸ், பண்டித மதன்மோகன மாளவியா, கோபால கிருஷ்ணகோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, ராஷ்பிகாரிகோஷ், லால்மோகன் கோஷ் ஆகியோருள்ளிட்ட இந்து கனவான்களும் நாடறிந்த தேசியத் தலைவர்களாகி விட்டனர். இது, காங்கிரசின் அரும்பெரும் சாதனையாகும். பிரிட்டிஷ் அரசாங்கமே இத்தனை பெருந்தலைவர்கள் காங்கிரசிலே தோன்றியது கண்டு வியப்படைந்தது. அனைத்திந்தியத் தலைவர்களேயன்றி, மாநிலந் தோறும் பல்வேறு சாதி மத வருணங்களிருந்தும் தலைவர்களைக் காங்கிரஸ் தோற்றுவித்துவிட்டது.. காங்கிரஸ் தோன்றிய ஆரம்ப காலத்திலே தமிழ் நாட்டில் படித்த சமூகத்திலிருந்துதான் தலைவர்கள் மிகுதியாகத் தோன்றினர். அவர்களில் திருவாளர்கள் ஜி.