பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேசியத்தை முழுமையாக்கிய அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய தேசியம் வளர்ந்த காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்க காங்கிரசின் வரலாறு வழிகாட்டுகின்றது. முதலாவது கட்டம், 1885 தொடங்கி 1905 வரையுள்ள 20 ஆண்டுகளாகும். அக்காலத்திலே, இந்திய தேசியம் என்பது, சமுதாயத்தின் மேல்மட்டத்தி லிருந்த ஆங்கிலம் படித்த புதிய வகுப்பாரின் ஒற்றுமையை மட்டுமே குறிப்பதாகத்தான் இருந்தது. அக்காலத்தில், மேட்டுக் குடிகள் எனத்தக்க குடும்பங்களி லிருந்துதான் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் தோன்ற முடிந்தது. அதனால், ஆண்டுதோறும் காங்கிரஸ் மகா சபையில் கூடுவோரில் பெரும்பாலோர் பட்டதாரி களாகவே இருந்தனர். பட்டதாரிகளின் கோரிக்கைகள் மகாசபை நிறைவேற்றும் தீர்மானங்களும் அநேகமாகப் பட்டதாரிகளின் குறைபாடுகளைப் போக்க முயலும் கோரிக்கைகளாகவே இருந்தன. அவை வருமாறு.