பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

SA இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய காங்கிரசை சமுதாயச் சீர்திருத்த இயக்கமாகவும் மாற்றினார் காந்தியடிகள். ஆம்; தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், தேசியக் கல்வி, பொருளாதாரச் சமத்துவம் ஆகியவை இந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவிக்கக் கூடியவையல்லவா! பதின்மூன்று அம்சங்களும் காங்கிரஸ்காரர்களிலே ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டியவையாகும். 1917-ல் கல்கத்தாவில் பெசண்ட் தலைமையில் கூடிய வருடாந்தரப் பேரவையிலே, காங்கிரஸ் மாகாணங்களை மொழிவாரித் திருத்தியமைப்பது கொள்கையளவில் ஏற்ப்பட்டதென்றாலும், நாகபுரி காங்கிரசிற்குப் பின்னர்தான் காந்தியடிகளின் முயற்சியால் அது ஏக காலத்தில் நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தமிழ் வழங்கும் பிரதேசத்திற்குத் “தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டி" அமைக்கப்பட்டது. காங்கிரஸ் அமைப்பு விதிகளிலும் மாறுதல் காண நாகபுரி காங்கிரசிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, “முடிந்தால், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டும் - முடியாவிட்டால், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பிரிந்தும் வாழும் சுயராஜ்யத்தைப் பெறுதல் காங்கிரஸ் குறிக்கோளானது. ஜனநாயகப் பாதையிலே... காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டுச் சந்தா நான்கணா வாகக் குறைக்கப்பட்டதுடன், காங்கிரஸ் கமிட்டியின்