பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது ஒரு அமைப்பாகும், அதனாலேயே "தேசிய" என்னும் அடைமொழி அதன் பெயரோடு இணைந்தது." 72 பட்டதாரிகளைக் கொண்டு பல மாநில அரசியல் பிரதிநிதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய நேஷனல் காங்கிரஸ்' எனும் பெயரில் உள்ள நேஷனல்" என்ற அடைமொழி ஏற்கத்தக்கதா? எனும் கேள்வியும் பின்வருமாறு எழுப்பப்பட்டது. தேசிய காங்கிரஸா? - முதல் இந்திய தேசியக் காங்கிரசில் கலந்து கொண்ட பேராசிரியர் க. சுந்தரராமன், 1908-ல் காங்கிரஸை தேசியக் காங்கிரஸ் என்று குறிப்பிடுவதைக் கடுமையாகக் கண்டித்தார். அவர் எழுதியதாவது. "அது, தன்னைத் 'தேசிய' என்று அழைத்துக் கொண்டாலும், அதன் வழி முறைகள் உண்மை யில் அவ்வாறில்லை. - பெரும்பாலும், அந்நிய ஆட்சியைத் தூக்கியெறியவும், அதற்குப் பதிலாக அந்தந்த நாட்டுக் குடிமக்களால் உருவாக்கப்பட்ட சுதந்திர அரசாங்கம் நிறுவப்படுவதையும், ஐரோப்பிய நாடுகளின் தேசிய இயக்கங்களின் வளர்ச்சியைக் கூறும் சரித்திரத்தில் அறிகிறோம். காங்கிரசின் கொள்ளைகளில் அரசியல் புரட்சி யைப் பற்றிய தீர்மானத்திற்கு இடமில்லை. அதன் தலைவர்களில் ஆங்கிலேயரான சிலர் இந்திய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைத் துண்டாட விரும்புவார்கள் என்ற கருத்து முட்டாள்களுக்குத் தான் தோன்றும், எவ்விதக் கவனத்திற்கும் உரியதல்ல, அது."