பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பழங்காலம் (The Ancient Period)

மிகப் பழங்காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகம் என்று வங்காளத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அங்கே புத்தபிக்குகள் நடத்திவந்த பல்கலைக்கழகத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இன்றைய விளையாட்டுக்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

அதிகாலையில் ஏரி குளங்களில் சென்று நீராடுதல்.

ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டங்களில் தாண்டிக் குதித்தல்.

குவித்து வைத்திருக்கும் பொருட்களில் குவியலைக்

கலைக்காது. ஒவ்வொன்றாக எடுத்து வைத்தல் (உருளைக் கிழங்கு பொறுக்கும் போட்டிபோல)

வலையில் விழும் பந்தாட்டங்கள் (Trap Ball Games) மேலாடும் பந்தாட்டங்கள் (Tossing Balls)

கொம்பு ஊதுதல் (Blowing Trumpets)

உழுவது போல நடிக்கும் போட்டிகள்.

வில் வித்தையில் போட்டிகள். கோலிக்குண்டு விளையாட்டுப் போட்டிகள். அடுத்தவர் நினைவைக் கூறும் சோதனைப் போட்டிகள்.

தேரோட்டப் போட்டிகள்.

பிறர் செயலை நடித்துக் காட்டும் போட்டிகள்.

யானை ஒட்டும் போட்டிகள்.

கத்திச் சண்டை.