பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

35



கோட்டளவில் உடல் இருப்பது போல, உள்ளங்கைகளாலும், முகபாதங்களாலும் உடல் தாங்கப் பட்டிருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை: படுத்திருப்பது போன்ற நிலையி லிருந்தே இந்தத் தண்டால் தொடங்குகிறது.

முதலில் வலது கையை 6 அங்குல தூரம் முன்புறமாக வைத்து முழங்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளவும். இதைச் செய்கின்ற சமயத்திலே இடது காலைக் கொண்டு வந்து வலது காலுக்கடியிலே வைத்திட, அதேநேரத்தில் வலது புறமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளவும்.

பிறகு, கைகளை விறைப்பாக மேலே உயர்த்திக் கொண்டு, இடது கையை 6 அங்குல தூரம் முன்புறமாக வைத்து, அதே சமயத்தில் வலது காலைக்கொண்டு வந்து இடது காலுக்கடியிலே வைத்திட, முகத்தை இடப்புறமாகத் திருப்பிக் கொண்டு முன்னேற வேண்டும். குறிப்பு: இடது கையை முன்னே எடுத்து வைக்கும் பொழுது வலது காலை இடது காலுக்கடியிலும், வலதுகையை முன்னே எடுத்துவைக்கும்பொழுது இடது காலை வலது