பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘ஒரு கடவுள்’ என்ற கொள்கையை மறுக்கவே நாத்தி கம் தோன்றியது. பின்னர் தோன்றிய பிரம்மம், ஒரே கடவுள் என்ற கொள்கைகளே மறுக்கவும் நாத்திகம் தன் வாதங்களை வளர்த்துக் கொண்டது.



4. ஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும்


வேத காலத்திற்கு பின் பொருள்முதல்வாதச் சார்புடைய மூன்று கொள்கைகள் உருவாயின. வேதயக்ஞங்களை எதிர்த்தவர்கள், ஐம்பூதக் கொள்கை, பிரக்ருதி கொள்கை, சுபாவவாதம் ஆகியவற்றை முன் வைத்தனர். உலக இயக்கத்திற்கு பூதங்களின் செயல்களே காரணம் என்றும், உலக இயக்கத்தை விளக்க கடவுளின் தலையீடு தேவையில்லை என்றும் கூறியவர்கள் லோகாயதர்கள். இவர்கள் முரணற்ற நாத்திகர்கள். ‘பிரக்ருதி’ என்ற மூலப் பொருளின் பரிணும மாற்றமே பிரபஞ்சத்தின் உருவாக்கத் திற்குக் காரணம் என்று சாங்கியவாதிகளின் கடைப்பிடி. அவர்கள் கடவுளின் செயலை மறுத்தார்கள். இவர்களது பண்டைக்கால தத்துவம் நிரீச்சுவர சாங்கியம் என்று எதிரி களால் அழைக்கப்பட்டது (நிரீச்சுவர= கடவுள் இல்லாத). இதனோடு சுபாவவாதம் என்றதோர் கொள்கையும் உருவாயிற்று. இதனைப் பல தத்துவவாதிகள் ஏற்றுக் கொண்டனர். பொருள்களின் குணங்களால் (சுபாவம்) உலக மாறுதல்கள் அனைத்தும் நிகழ்கின்றன என்பது சுபாவவாதத்தின் உள்ளடக்கம். இந்தக் கொள்கை, ஆரம்பத்தில் எந்தத் தத்துவத்தோடும் சார்புடையதாக இருக்கவில்லை. பின்னர் பொருள்முதல்வாத தத்துவங்களான லோகாயதம், சாங்கியம் இவற்றின் பகுதிகளாக இக்கொள்கை பொருந்திவிட்டது. கடவுளே மறுக்க இக்கொள்கையைப் பண்டையப் பொருள்முதல்வாதிகள் பயன்படுத்தினர்கள்.

‘சுவாவம்’ என்னும் கொள்கைதான் பண்டையத் தத்துவ வரலாற்றில் மத நம்பிக்கையையும், விஞ்ஞான

24.