பக்கம்:இந்திர மோகனா.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

83

சியைச் சாணக்கிய னுக்குக் கொடுத்து அவருக்கு முடி சூட்டப் போகிறார்கள். அப்புறம் அவர் தானே நமக்கு மஹாராஜா, உம். நான் மஹாராஜா காலை வைத்துக்கொண்டு பூஜை பண்ணால் என்னைப் பரிகாசமா செய்கிறீர்கள்? ஆகட்டும். நான் இதோ போய் நம் மஹாராஜாவிடம் எல்லாவற்றையும் சொல்லி உங் களைத் தண்டிக்கச் செய்கிறேன். அவருக்குத்தெரியாத ராமா உங்களுக்குத் தெரியப்போகிறது? வாருங்கள்

யணமா

போவோம்.

(தனக்குள்) இதுதான் நல்ல சமயம். இந்த மரக்கட் டைக் காலை அரசனிடம் காண்பித்து உள் மர்மத்தைத் தந்திர மாகச் சொன்னால் இந்தக் கலியாணம் நின்றுவிடும். சித்தி ராங்கி சூழ்ச்சியெல்லாம் வெளியாய்விடும். (பிரகாசமாய்)அடே வீடுபார்த்தான் ! வா. ராஜா கிட்டபோய் இவங்களுக்கெல்லாம் விலங்கு போடலாம் (மரக்கட்டைக் காலை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். மற்றவர்கள் அஞ்சி நிற்கிறார்கள்.)

முதற் களம் முற்றிற்று.

மூன்றாவது அங்கம். இரண்டாங்களம். இடம் :-சந்திரபுரி குணசேனன் ஆஸ்தான மண்டபம். காலம்: காலை.

குணசேனன் சிங்காதனத்தில் வீற்றிருந்தபடி பிரவேசம்.) குண :-(மந்திரியைப் பார்த்துக் கேட்கிறான்.) விருத்தம் - ராகம்: தர்பார்.

கோதிலா வமைச்சரே நம்குடிக ளின்பமாகவே தீதிலாமல் வாழுகின்ற சேதியை நிகழ்த்துவீர் வேதமோதும் விப்பிரர் விரும்புகோவிற் பூஜையை நீதமாய் நடத்துகின்ற நேர்மையை யுசைப்பிரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/100&oldid=1559567" இலிருந்து மீள்விக்கப்பட்டது