பக்கம்:இந்திர மோகனா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

87

சபையோர்:-ஆஞ்ஞைப்படியே(அரண்மனையில் மாமூ

லாயிருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் நிஷ்க்ரமித்தல்.

மந்திரியும் போதல்.)

குண. பேஷ். வெகு நன்றாயிருக்கிறது.

நாட்டியப்பெண்கள்:-

(விமலகமல என்ற பார்சி மெட்டு.)

அகிலபுவனரக்ஷிதனே சகலர்புகழும்

ஆதிமூலமே உன்னை

நம்பிப்பணிந்து போற்றுகின்றோம் நளினமலர்நாயகனே

ஆதரித்தருளவேண்டும் மோஹனாங்கமுரளி

கானஞ்செய்யும் கமலக்கண்ணா காக்கவேணும் ஆதிமூலமேயெம்மை.

(நேபத்யத்தில்)

ஐயோ! அநியாயமே. இதென்ன இது! எங்குநடக்கும்? குண:-(செவிசாய்த்து ஆத்மகதமாய்) ஆ ! இதென்ன கூச்சல்! அநியாயம் என்று கூவுகிறார்களே. எங்கு என்ன அநியாயம் நடந்து விட்டது? மோஹனாவை யழைத்துவர அனுப்பிய மந்திரி ஏன் இன்னும் வரவில்லை. (மறுபடியும் நேபத்யத்தில்) ஐயையோ! முழுகிப்போய்விட்டதே. நாளைக் குக் கலியாணமாயிற்றே.

குண: (திடுக்கிட்டு ஆத்மகதமாய்) ஒ ! நமது அரண் மனையில்தான் என்னவோ நடந்திருக்கிறது. (உற்றுநோக்கி) அதோ யாரோ வருகிறாளே.

என்ன

சித்: (பரபரப்போடு பிரவேசித்து) ஐயோ ! நாட்டியம் வேண்டியிருக்கிறது. அந்தத் தடிச்சிறுக்கி செய்த வேலையைப் பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/104&oldid=1559571" இலிருந்து மீள்விக்கப்பட்டது