88
இந்திர மோஹனா
குண:-ஆ! என்ன சித்ரா! என்ன சமாசாரம்? அந்தத் துஷ்டை உன்னை என்ன செய்தாள்? சீக்கிரம் சொல். உடனே தண்டிக்கிறேன்.
(நாட்டியப்பெண்கள் அயர்ந்து நின்றுவிட்டார்கள்.)
சித்:- ஐயோ ! என்னை என்ன செய்யவேண்டும் ? விவா கம் வேண்டாம் வேண்டாமென்று பிதற்றியவாறு செய்து விட்டாள்.
குண:- ஹா ! என்ன செய்துவிட்டாள்?
சித்:- நாதா! நாளை உதயமானால் விவாகமன்றோ ? எப் படியும் நீங்கள் கண்டிப்பாய் விவாகத்தை நடத்துவதாகச் சொல்லிவிட்டீர்கள். அவள் "நான் இங்கிருந்தாலல்லவோ விவா கம் செய்வார்கள்" என்று துணிவாய் அரண்மனையை விட்டு
எங்கோ ஓடிவிட்டாள்.
குண:- (வீராவேசத்தோடு) ஹா! மோஹனாவா ஒடி விட்டாள்! அரண்மனை முழுவதும் தேடிப் பார்த்தீர்களா? நந்தவனம் முதலிய இடங்களிலும் தேடினீர்களா? எங்கே? அவளைப் பார்த்தீர்களா?
சாகரீகா
சித்:- வெட்கக் கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? நேற் றிரவு சாகரீகா தன்தாய்க்கு உடம்பு சரியில்லை யென்று என் னிடம் செலவு பெற்றுக்கொண்டு தாயிடம் போய்விட்டாள். இந்தச் சிறுக்கி தனியாய்ப்படுத்துக் கொண்டாள். வேறு பணிமகளைத் துணையனுப்புவதாகநான் சொன்னதற்கு அந்தத் துஷ்டை ஒன்றும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இன்று காலையில் நான் சுமங்கலி பிரார்த்தனைக்காக வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துகொண்டிருந்தேன். அப்போது சாக ரீகா திடீரென்று ஓடிவந்து "அந்தப்புரத்தில் மோஹனா