இந்திர மோஹனா
89
வைக் காணோமே, எங்கே ?" என்று என்னைக் கேட்டாள். நான் "காலையிலிருந்து பார்க்கவில்லையே" என்று பதில்சொன் னேன். உடனே நாங்கள் அவளைத் தேட ஆரம்பித்தோம். அத்தருணம் மந்திரியும் வந்து மோஹனாவைத் தாங்கள் அழைப்பதாகச் சொன்னார். மந்திரியிடம் அவளைக் காணா மல் தேடுகிறோமென்று சொன்னேன். உடனே அவரும் சேர்ந்து அவள்வழக்கமாய்ப் போகுமிடங்களிலெல்லாம் தேடி னார். எங்கும் காணவில்லை. காலையிலிருந்தே சாகரீகா முழு தும் தேடினாள். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறாள். இப் பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை.
குண:-ஹா ! அவள் இவ்வளவு தந்திரமாகவா ஒடிவிட் டாள்? ஆகட்டும். நாளைக்காலைக்குள் அவளை எவ்விதமாகி லும் தேடிக் கண்டுபிடித்து விவாகத்தை முடிக்கிறேன் பார். யாரடா அங்கே?
சேவகன்:- மகாராஜ் !
குண:-அடே! நீங்கள் எல்லாரும் திக்குக்கு நால்வரா கச்சென்று நாளைக்காலைக்குள் மோஹனாவைத் தேடியழைத்து வரவேண்டியது.
சேவ:- மகாராஜ் ! சித்தப்படியே செய்கிறோம்.
(போகிறான்)
(சாகரீகாவும் மந்திரியும் பரபரப்புடன் பிரவேசித்தல்)
மந்திரி:- ஐயையோ ! மஹாராஜ் ! காரியம் விஞ்சிவிட் டது. அரண்மனை முழுதும், இன்னும் இளவரசியம்மா வழக் கமா யிருக்குமிடங்களி லெல்லாம் தேடியும்
வாகையால் வேலையாட்களை மூலைமூலையாய்த்
காணவில்லை
தேடும்படி