90
இந்திர மோஹனா
யனுப்பிவிட்டு வந்தேன்.
தேடுகிறாளாம்.
சாகரீகாவும் அதிகாலையிலிருந்து
குண: - ஹா! அப்படியா? அப்போதே சித்ரா சொன் னாள். இன்னுமா அகப்படவில்லை! (சாகரீகாவைப் பார்த்து) சாகரீகா! நீ அவளை எப்போது கடைசியாய்ப் பார்த்தாய்?
சொல்.
சாக:- (பயத்துடன்) அரசே ! நேற்றிரவு நான் உங்க ளிடமிருந்து ராணியார் மூலமாகக் கடிதம் வாங்கிக்கொண்டு போய் இளவரசியம்மாவுக்குக் கொடுத்துவிட்டு என்தா யிருப் பிடத்திற்குச் சென்றேன். பிறகு அதிகாலையில் வந்துபார்த்த போது இளவரசியைக் காணவில்லை.
குண: (திடுக்கிட்டு) என்ன ? என்னிடமிருந்து கடி தமா? யாருக்கு? சீ உளராதே.
சாக:-பிரபோ! கோபித்துக் கொள்ளவேண்டாம். சற்று
ஆலோசித்துப் பாருங்கள்.
(சித்ராங்கி இதைக் கேட்டதும் திடுக்கிட்டு, திருட்டு விழிவிழித்து, கையைப் பிசைந்து கொண்டு தனக்குள்)
ஐயோ! மோசம் வந்துவிடும்போ லிருக்கிறது.நான் திருட்டுத்தனமாய் அரசன் எழுதியது போல் அனுப்பிய கடி தம் அரசனுக்குத் தெரிந்துவிட்டால் என்கதி என்னவாகும்? ஈசா!
குண:- (சாகரீகாவைப் பார்த்து) அடிதுஷ்டை ! என்ன பிதற்றுகிறாய் ? ஆலோசனை என்ன? சீக்கிரம் நடந்ததைச் சொல். அவள் போனஇடம் உனக்குத் தெரியாமலிராது.
சாக:-(பயத்துடன்) ப்ரபோ ! நேற்றுமாலையில் நானும் இளவரசியும் நந்தவனத்திலிருந்து திரும்பி வந்தபோது,