பக்கம்:இந்திர மோகனா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

91

சாணக்கிய இளவரசர், நம் மிளவரசியின் அந்தப் புரத்தில் தாளிட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொண்டார். நொண்டியான சாணக்கியர் சற்றுநேரம் கழித்துக் கதவைத்திறந்து கொண்டு பரபரப்புடன் ஒடிவந்து இளவரசி யம்மாவைக் கட்டிக்கொள்ளப்போகையில் அவருக்குக் கட்டி யிருந்த மரக்கட்டைக்கால் கீழேவிழ, அவரும் விழுந்துவிட் டார். அப்பொழுது இளவரசியம்மா அங்கு நடந்த சாரத்தைப்பற்றி விவரமாகத் தங்களுக்கு எழுதிக் கடைசி தடவையாக இந்தக் கலியாணத்தை நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டிக்கொள்கிறேன் என்று எழுதி என்னிடம் கொடுத்த கடிதத்தைத் தங்களிடம் கொண்டுவந்தேன்.

சமா

சித்: (திடீரென்று வார்த்தையை மறைத்து உடல் நடுக் கத்தோடு) நாதா! இதெல்லாம் என்ன கட்டுக்கதை பாருங் கள இந்தத் தடிசிறுக்கி என் மருமகன் சாணக்கியனைப் பைத்தியம் பிடித்தவ னென்று சொல்லக்கேட்டும் அவளைத் தண்டிக்காமலிருக்கிறீர்களே; வெகு நன்றாயிருக்கிறது. கொஞ் சமேனும் பயமில்லாமல் என்னெதிரிலேயே அவள் உளறுகி றாளே. அவள் நாக்கைத் தோண்டி யெடுக்கவேண்டாமா? அவளை முன்னே துரத்திவிட்டு, அந்த நீலியைத் தேடும் வழியைப் பாருங்கள்.

குண:--அடி பெண்ணே! எனக்கு மாப்பிள்ளையாய் வரப்போகும் இளவரசனை வாய்கூசாமல் நொண்டியென்றும், பைத்தியமென்றும் சொல்கிறாயா? ஜாக்கிரதை. உனக்குத்

தக்க தண்டனை விதிக்கிறேன் பார். (சித்ராங்கியைப்பார்த்து சித்ரா! கவலைப்படாதே. இவள் நொண்டி யென்றால் அவன் நொண்டியாய்விடுவானா? துயரப்படாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/108&oldid=1559575" இலிருந்து மீள்விக்கப்பட்டது