92
இந்திர மோஹனா
ஆக
மந்திரி:-அரசே! எதற்கும் இவள் சொல்வதையும் சற்று முழுமையும் கேட்டுவிட்டுப் பிறகு மேல் வேண்டியதைப் பற்றி யோசிப்போம். ஏனெனில், இவள் வாய்மூலமாகவே இளவரசியம்மா போயிருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க ஏதாவது புலன் அகப்படலாம்.
சித்:-போதும். அவள் போன இடம் இவளுக்குத் தெரியாமலிருக்குமா ? அதை இவள் சொல்லுவாளோ? நன்றா யிருக்கிறது. (சாகரீகாவைப் பார்த்து) போடி அப்பாலே வெட்கமில்லாமல் நிற்கிறாய். (தனக்குள்) என்ன செய்வது? போதாக்குறைக்கு இந்தப் பாழ் மந்திரி சமயத்திற்குச் சனி யன் போல் வந்து சேர்ந்தானே.
(நேபத்யத்தியில் "வாடா சீக்கிரம் வாடா. நான் எவ்வ ளவோ அக்கரையாய்ச் செய்தால் என்னை ஏளனமா செய்கிறார் கள்? இருக்கட்டும். ராஜா கிட்ட வாருங்கள்.")
சித : ஆ! இதென்ன! யாரோ சண்டையிட்டுக்கொண்டு வருகிறாப்போலிருக்கிறது. இதுவும் ஒரு நல்ல கால தான் நமக்கு. எப்படியாவது இவள் பேச்சு மேலே ஒங்காமல் நின்றுவிட்டால் போதும். நேற்றிரவு நடந்தது அரசனுக்குத் தெரியாமலிருக்க வேண்டுமே.
(மறுபடியும் நேபத்யத்தில் "அடே! ஓடி வாடா. ஓடி வாடா. அதோ ராஜா, மந்திரி, அரசி எல்லோரும் இருக் காங்கோ. நம்ம சேதியைத் தெரிவிச்சு அவுங்களை நண்ணா தண்டிக்கலாம் .')
சித்ராங்கி:- (மகிழ்ச்சியுடன் தனக்குள்)என் நல்லகாலத் திற்குத்தான் அதோ யாரோராஜாவினிடத்தில் நேரில் பிராது செய்துகொள்ள வருகிறார். இந்தக் கலபையில் ராஜா இதை