பக்கம்:இந்திர மோகனா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறந்து விடுவார்.

இந்திர மோஹனா

93

அவருடைய பிராது எதுவாயிருந்தாலும் அவர் பக்கம் தீர்ப்பாகும்படி செய்கிறேன். அவர் நன்றாயிருக்க வேண்டும்.(பிரகாசமாய்) இவளைத் துரத்துங்கள்.

சாக:-(தனக்குள்) இது என்ன ஆச்சரியம் ! நேற்றிரவு கடிதம் கொடுத்தது அரசனுக்கு நினைவு இல்லையே. என்னைத் திட்டுகிறாரே. இவள் எதற்கு என்னை சிடுசிடு என்கிறாள். இதையெல்லாம் பார்த்தால் ஏதோ சமுசயமாகவே யிருக் கிறது. ஒருகால் அந்தக் கடிதத்தை இவள் அரசனுக்குகி காட்டாமலிருந்திருப்பளா. எதற்கும் அதோ விதூஷகர் வரு கிறார். அவர் என்ன காரியமாக வருகிறாரோ பார்த்துக் கொண்டு பிறகு அரசனுக்குத் தெளிவாய் இக்கடிதத்தைப் பற்றி நினைவு மூட்டுவோம்.

குண: - மந்திரி! எனக்கு இப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை. என்மனம் தத்தளிக்கிறது. அந்தக்கழுதைப் பெண் இத்தனை நாள் என் சொல்லை மறுத்ததுமல்லாமல் இன் றைக்கு ஓடிப்போயும் விட்டாளே ! என்ன செய்வேன்? எத் தனையோ தேசத்தரசர்களெல்லாம் வந்துவிட்டார்கள். நாளை உதயத்திற்கு முகூர்த்தம். உம்; ஆகட்டும். எப்படியாவது அவளைத் தேடி என் எண்ணத்தை முடிக்கவேண்டும். இல்லா விடில் என் பெயர் குணசேனன் அல்ல. (திரும்பிப்பார்த்து) யார் அங்கே? கும்பலாய் வருகிறது!

விதூ:- (பிரவேசித்துக்கொண்டே, அடே கோவிந்தா போட்ரா என, எல்லோரும் கோவிந்தா, போயிந்தா, ஒச் சிந்தா, மாவிந்தா. போயிந்தா. போயிந்தா. கோயிந்தா. என் கிறார்கள்) மகாராஜ் ! வந்தனம் தந்தனம். ஓர் பிராது.

குண:-(கோபத்தோடு) என்ன விதூஷகரே ! உமக்கு வேளை சமயமில்லையா? என்னபிராது கொண்டுவந்தீர்?சீக்கிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/110&oldid=1559578" இலிருந்து மீள்விக்கப்பட்டது