பக்கம்:இந்திர மோகனா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

இந்திர மோஹனா

சொல்லும். பேச்சை வளர்த்தினால் எனக்குக் கோபம்வரும். ஓய்! நீர் கடைசிதரம் மோஹனாவை எப்போது பார்த்தீர்?

டேன்,

விதூ:-ஆம், ஆம். நான்கண்டேன். நிச்சயமாய்க் கண் நான் கண்டபோது மோஹனா கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அதாவது ராத்திரி நீங்கள் சாகரீகாவிடம் கடிதம் அனுப்பினீர்களே, அதை வாசித்து மிகவும் துக்கப்பட் டாள். அதிருக்கட்டும். ராமாயணத்தில் பரதர் பஞ்சவடிக் குப் போய் ராமரிடம் என்ன பெற்றுக்கொண்டு வந்தார் ? சற் றுத்தெரிவிக்கவேண்டும். அதிலேதான் இப்போது சண்டை.

குண:- என்னடா இது? நாம் கடிதம் யாருக்குக் கொடுத்தோம். சாகரீகாவை நாம் பார்க்கவே யில்லையே:

இதைத் தீர விசாரிக்கவேண்டும்.

சித்:- (திகிலுடன் தனக்குள்) ஐயோ! நம் தலையில் யாரோ வருகிறாரென்று

கல்லைப் போட்டுவிட்டானே பாவி. மகிழ்ந்து மனப்பால் குடித்தேனே. இந்த விதூஷகப் பாவியா வந்து சேர்ந்தான்? அந்த மரக்கட்டைக் காலை ஒருவேளை அர சனிடம் காட்டிவிடுவானோ. அவன் கையில் ஏதோ மூடி வைத்திருக்கிறானே; என்குடல் குழம்புகிறதே. என் செய் வேன் ஈசா! (திருட்டுவிழி விழித்துக்கொண்டு

பிசைகிறாள்)

கையைப்

விதூ:- அரசே! என்ன யோசனை செய்கிறீர்கள் ? மறந்துவிட்டாப்போ லிருக்கிறது. நான் சொல்கிறேன். நேற்றிரவில் இளவரசி யம்மா உங்களுக்குக் கடிதம் சாகரீகா மூலமாய் கொடுத்தனுப்பினாளே, அதை அரசியம்மாகையில் தான். (தடுத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/111&oldid=1559579" இலிருந்து மீள்விக்கப்பட்டது