இந்திர மோஹனா
95
சித் - ஓய்! உமக்கு வேறு வேலையில்லையா ! அரசர் கவலையுடனிருக்கும் போது என்னவோ அத்தைபாட்டி கதை சொல்லிக் கோபத்தை அதிகப்படுத்துகிறீரா? என்ன கூட் டம் இது? மட்டு மரியாதை யில்லாமல் கூச்சலைப்பார். போம் வெளியில்.
விதூ:-ஹிஹி! அம்மணி ! இங்கு அத்தையுமில்லை, பாட்டியுமில்லை. அரசியையும் இளவரசியையும் பற்றித்தான் கதை. அரசே ! பிறகு, சாகரீகா கொண்டுவந்த கடிதத்தை உங்களிடம் கொடுப்பதாக அரசியம்மா வாங்கிக்கொண்டு பதில் கடிதமும் வாங்கிக் கொடுத்தார்கள். அதைப்பார்த்து விசனப்படும் போதுதான் நான் இளவரசி யம்மாவைப் பார்த்தது. அது கிடக்கட்டும். பாதர் என்ன கொண்டு வந்தார் சொல்லுங்கள்.
குண:- (சீறியவாறு) என்ன ! என்னிடமா கடிதம் கொடுத்தனுப்பினாள். நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நேற் றிரவு எனக்குக் கடி தமும் வரவில்லை. நான் பதிலும் கொடுக்கவில்லை.
விதூ:- அரசே ! இதற்கு இவ்வளவு கோபம் எதற்கு? அரசியைக்கேட்டு நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். (தனக் குள்) இதுதான்நல்லசமயம்; நம்வேலையைக் காட்டவேண்டும்.
சித்: (இடியோசை கேட்ட நாகம்போல் பயந்து தனக் குள்) ஐயையோ ! இந்தப்பாவி வாழைப்பழத்தில் ஊசி ஏற்று வதுபோல் நம்மை இழுத்து விடுகிறானே, நான் என்ன செய் வது. அரசன் நம்மைக் கேட்டால் இல்லவேயில்லை யென்று சொல்லிவிடவேண்டும்.
குண:- சித்ரா என்ன செய்தி ? இவன் என்னவோ உளறுகிறானே.