96
இந்திர மோஹனா
சித்ரா:-நாதா! அந்தப் பைத்தியத்தின் பேச்சு ஒரு பேச்சா? அவள் மூஞ்சியை யார் பார்த்தா,அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படிக் கடிதம் வந்தால் நான் தங்களிடம் காட்டாமலிருப்பேனோ. நாதா ! இவர்களை முன்னே துரத்,
துங்கள்.
யில்,
குண:- சீ. பொய்யா சொல்கிறீர்கள் ? போங்கள் வெளி
விதூ (தனக்குள்) ஹும். நானா இவள் பேச்சுக்குப் பயந்து போகிறவன்? இன்னும் சற்றுநேரத்தில் இவள் என்ன பாடுபடுகிறாள் பார்ப்போம். (பிரகாசமாய்) அரசே! அது கிடக் கட்டும். உங்கள் பாடு, அரசிபாடு; நான் கேட்டதைத் தெரிவி யுங்கள்.
மந்திரி:-ஒய்! என்ன வம்பு இது ? பரதர் ராமருடைய பாதுகையைக் கொண்டுவந்தார். அதற்கென்ன?
விதூ : ஆம். அதுதான்; அதுதான். பரதர்ராமருடைய பாதுகையை வைத்துக்கொண்டு பூஜை பண்ணினார். நான் நம் முடைய இளவரசரான சாணக்கியருடைய திருவடியை வைத் துக்கொண்டு திருவாராதனம் பண்ணினால் என்னை இவர்க ளெல்லாரும் பரிகாசம் பண்ணுகிறார்கள். அவர்களைத் தண்டிக் கத்தான் நான் தங்களிடம் பிராது கொண்டுவந்தேன்.
குண:-என்ன, என்ன? சாணக்கியன் திருவடியா? என்ன உளறுகிறீர்.?
-
சித்: (தனக்குள்) மோசம்போய்விட்டோம். இனிஇங்கு நிற்க லாகாது; நழுவிப்போய்விட வேண்டும். என்மானத்தை வாங்கவா அந்தச்சனியனை வளர்த்தேன்.(மெள்ள நிஷ்க்ரமித்தல்)