இந்திர மோஹனா
97
விதூ:- ஆம். ஆம், அதோ அரசியம்மாவைக் கேளுங் கள். இதோ பாருங்கள், உங்கள் மாப்பிள்ளையின் திருவடி. (மரக்கட்டைக் காலைக் காட்டுகிறான்.)
குண:- (வீராவேசத்தோடு ஆ! இது மரக்கட்டைக் காலல்லவா? இதுவா சாணக்கியன் கால்? அவன் என்ன முட வனா? ஜாக்கிரதை, உமது நாக்கை அறுத்துவிடுவேன்.
சேவகன்:-(பரபரப்புடன் பிரவேசித்து ஓர் கடிதத்தை அரசனிடம் கொடுத்து) அரசே! இது இளவரசியம்மாவின் அந்தப்புரத்தில் மேஜையின்மீது இருந்தது.
குண:- என்விலாசத்திற்குத்தான். என்ன எழுதி யிருக் கிறதோ, பார்ப்போம். (படிக்கிறான்.)
ராகம்: நா தநாமக்ரியை.
ஐயனே கேண்மின்
நிருபத்தை நீவிர்
மன முருகாமல்
வரைந்துநீர் என
எனக்கு
அடியாளனுப்பிய
நயமுடன் படித்தும் மறு கடிதத்தை
வாகுடன் அனுப்பிப்
பேதையின் மனத்தைப்
பிளந்திடச் செய்தீர்
அடியாள் மனத்தில்
அம்பெய் வதுபோல்
நைந்திடச் செய்து
நலிந்து நான்அப்பா
என்தன் உயிரை
சிந்தையில் எண்ணித்
எளிதினில் மாய்க்கச் துணிந்தனன் யானே
கலிகா லத்தினில்
தாமீன்ற சேயைத்
காவல செல்லாம்
தவிக்க விடுவரோ?
அப்பா! அடியாள் மீதில் இவ்வளவு கடுமையான எண்ண மிருக்குமென்று நான் எண்ணவே யில்லை. ஒருகால் நான்
7