பக்கம்:இந்திர மோகனா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

இந்திர மோஹனா

அனுப்பிய கடிதத்தைப் படித்த பிறகாவது சற்று மன மிள கலாமென்று எண்ணினேன். அதுவும் வீணாயிற்று. அப்பா அண்ண னென்றும் தம்பியென்றும் அருந்தவப் புதல்வ னென்றும்

அன்னை யென்றும் ஐயனென்றும் இகுளையர்க ளென்று மெண்ணார் கன்னியர்கள் மோக மென்னும் கடுவலையிற் கிடந்த லைந்தோர் முன்னம் தளராத் தீச்செயல்கள் முனைந்து செய்வார் நிலந்தன்னிலே.

ஆகா! சிற்றன்னையின் மோகவலையில் அகப்பட்டு நான் பெண்ணென்பதையும் மறந்து ஒரு முடவனுக்குக் கட்டிக் கொடுக்க உடன்பட்டீரே. ஒருகால் இதுவரை அவன் முடவ னென்று உமக்குத் தெரியாமலிருந்தாலும் கூடிய சீக்கிரம் அறிவீரென்று நம்புகிறேன். என் துரதிருஷ்டத்தால் உம்மை நான் மறுபடியும் பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை. என்னுயிர் இன்னும் 24 மணி நேரத்தில் சாச்வதமான இடத் திலிருக்கும். இனி என்னைப்பற்றிய கவலை உமக்கு வேண்

டாம்.

குண:- ஆ!

இப்படிக்கு

தங்கள் புதல்வி

மோஹனா.

இதுவென்ன

ஆச்சரியம்? இவர்கள்

சொன்னது பொய்யென்று நினைத்தால் இவள் எழுதுவதும் அப்படியே யிருக்கிறது. என்ன இது ! இன்னொருகடிதமிருக் கிறது. இதையும் பார்ப்போம். (படிக்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/115&oldid=1559583" இலிருந்து மீள்விக்கப்பட்டது