பக்கம்:இந்திர மோகனா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

இந்திர மோஹனா

குண:- (வீராவேசத்தோடு தனக்குள்) ஆ! நேற்றி ரவு எனக்குக் கடிதமும் வரவில்லை. நான் இந்தக் கடிதம் எழுதவுமில்லை. இது யாரோ செய்த சூது என்பதிலையமே யில்லை. (பல்லைக் கடித்து) இவர்கள் சித்ராவே நேரில் கடி தத்தை வாங்கிப் பதில் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அவள் இப்படிச் செய்திருப்பளா? சாணக்கியனை நொண்டி யென்று இந்தக் கடிதத்தில் எழுதியதன் காரணம் எனக்குத் தெரியவில்லையே. அவன் நொண்டியாயிருந்தால் எனக்குத் தெரியாமலிருக்குமா? எதற்கும் சித்ராவை விசாரித்தால் தெரியும். சித்ரா! சித்ரா ! கூப்பிடுகிறான்)-

66

விதூ:- (தனக்குள்) ஆப்டுகிண்டாரய்யா திமிட்டிக்கா பட்டர்" என்றபடி சங்கதி வெளியாகிவிடவே மெல்ல நழுவி விட்டாள். இதுதான் நல்ல சமயம், இந்த விவரத்தைச் சொல்ல. அரசனும் எதோ கலவரத்தோடு இருக்கிறார். (பிரகாசமாய்) அரசே ! என்ன யோசனை செய்கிறீர்கள்? நான் கேட்டதற்குப் பதிலுரைக்கவில்லையே. இந்தக் காலை வைத்துக்கொண்டு நான் பூஜை பண்ணுகையில் என்னை இவர் கள் பரிகாசம் செய்கிறார்கள். அதற்கு அவர்களைத் தண்டிக் கவேண்டும். இது சத்யமாய்ச் சாணக்கிய இளவரசரின் கால் தான். இதற்குச் சாட்சி வேணுமானாலும் கொண்டுவருகி றேன். அப்படி நான் பொய் சொல்லுவேனா? வேணுமானால் சாணக்கியரையே இங்கே அழைத்துக்கொண்டு வருகிறேன். (வீடுபார்த்தானுக்குக் கண்ணால் ஜாடை செய்ய அவன் விரைவில் சென்று நொண்டி சாணக்கியனைத் தூக் கிக்கொண்டுவருகிறான். எல்லாரும் பிரமிக்கிறார்கள்.)

குண:- (நோக்கி, கோபம் பொங்கக் கண்ணில் நெருப் யுப் பொறிபறக்க) ஆ! இவனை முடவனென்று என் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/117&oldid=1559585" இலிருந்து மீள்விக்கப்பட்டது