பக்கம்:இந்திர மோகனா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

101

மணிபன்முறை சொல்லியும் நான் அதைஇலட்சியஞ் செய்யாம லிருந்துவிட்டேனே. ஐயோ! இந்த முடவனுக்கா என் மோஹனாவைக் கொடுக்கவேண்டுமென்று என்னை வஞ்சித்து, ஏமாற்றிக் கண்ணில் மண்ணைத்தூவி, அவனை என்னெதிரில் காட்டாமல் மறைத்துவைத்து இவ்வளவு ஏற்பாடுகள் செய்து விட்டாள், அச்சித்திராங்கி. ஏ சித்திராங்கி ! உன் வஞ்சகம்

தெரியாமல் நான் பெற்ற பெண்ணையும் இழந்துவிட்டேனே. என்னரும் புதல்வி எழுதிய கடிதத்தில் "கன்னியர்கள் மோக மெனும் கடலலையிற் கிடந்தலைந்தோர்" என்று பொதுவாக ஏன் சொல்லவேண்டும்? என்னையே நேரில்' சொல்லலாமே. எங்கே அந்தப் பாவி சித்திராங்கி? என்ன தளுக்கு பண்ணி என்னை மயக்கி என் கிளியைப் பறந்துபோகும்படி செய்து விட்டாள். இந்தக் கடிதத்தை மனந்துணிந்து என் கையெ ழுத்துப்போல் எழுதி என் முத்திரை வைத்து மோஹனா வின் மனத்தைப் புண்படுத்தி அவள் உயிரை மாய்த்துக்கொள் ளும்படி செய்தாளே, அவளை என்ன செய்தாலும் பாவ மில்லை. அடே சாணக்கியா ! உன்கால் எங்கே? சொல்.

சாண:-மாமா! மாமா! என்காலை இவர் பிடுங்கிண்டூட் டார் .ஆ! இதோ இருக்குதே. எங்க அத்தை பாத்தா அடிப் பாளே. அவள் வெச்சுக்கட்டின காலாச்சே. நேத்தி நான் மோகனாவைக் கட்டிக்கப்போனேனே, அப்போ கீழேவிழுந் தூடுது. மாமா! என்னைப்பாத்து மோகனாவும் இவரும் என்னமோ சொன்னா. அவாளெ அடிக்கணும். மாமா! நானு உம்மசிம்மாசனத்லே ஒக்காரப் போரேன்னு அத்தே சொன்னா. நானு இப்போ ஒக்காரட்டுமா! என்கால் இல் காலை கட்டிக்குண்டு ஒக்கார்ரேன்.

லையே.

(நொட்டை விடுகிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள்.)

181826 0-2 MEM, I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/118&oldid=1559586" இலிருந்து மீள்விக்கப்பட்டது