பக்கம்:இந்திர மோகனா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

இந்திர மோஹனா

குண:- (அடங்காக் கோபம் கொண்டு சீறி யெழுந்து) ஆ ! என்னை இவ்வளவு வஞ்சகமாய் ஏமாற்றின அந்தச் சித்தி ராங்கி எங்கே? அவள் மோகத்திலீடுபட்டு என் கண்மணி யைக் கவனிக்காமல் போய்விட்டேன். அன்று மோஹனா என்காலைப் பிடித்துக்கொண்டு "மாற்றாந்தாய் மாற்றங் கேட். டுக் கடிமணம் செய்வதாலே கெடுதிகள் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ நீதியாய்க் கூறினதைக் கேட்காம லிருந்தேனே. இவன் முடவன் என்று தெரியாமல் இவனை மணஞ் செய்து கொள்ளும்படி அவளை வற்புறுத்தித் துராக்ருதமாய் நான் உதைத்துத்தள்ளி அவளேதிரிலேயே என்னை வஞ்சித்த படுநீலியை அன்பா யழைத்துவந்தேனே. அதைக் கண்ட என் மோஹனாவின் மனம் எப்படித் துடித்ததோ? என்னை இப்படி ஏமாற்றி என் குழந்தையைக் கொன்ற பாவியை இப் போதே என் வாளால் சேதிக்கிறேன். இந்தமுடவனை நான் நேரில் பார்த்த பிறகு என்கும்பிவேகிறது. எங்கே அந்த நீலி ? (உருவினவாளுடன் சித்திராங்கியைத் தேடிக்கொண்டு ஓடுகையில் மந்திரியும் விதூஷகரும் தடுக்கிறார்கள். இதனடு வில் சாணக்கியன் மெதுவாய் நகர்ந்துகொண்டே சிம்மாசனத் தில் உட்காரப் போகையில் அரசன் கண்டு வெகு கோபத் தோடு அவன் கன்னத்தில் அறைந்து கையைப் பற்றி இழுத்து தூரத்தள்ளுகிறான்.)

சாண:-உம். உம் உம். அத்தே! மாமா தள்ளினார். உம்.உம்.உம். (அழுகிறான்.)

விதூ:-அரசே ! வீணில் கோபித்து ஆவதென்ன? நடந்தது நடந்துவிட்டது. இனி என் செய்வது ? இப்போதே. தக்க பிரயாசைப் பட்டு குழந்தையைத் தேடிப் பிடித்து உயிருடன் கண்டால் போதும். அரசியின் மேல் ஏன்கோபம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/119&oldid=1559587" இலிருந்து மீள்விக்கப்பட்டது