இந்திர மோஹனா
103
அவர்கள் என்ன செய்வார்கள்? எல்லாம் கால வித்தி
யாசம்.
ண
குண:-ஆ! என் கண்ணே ! மோஹனா ! உன்னைச் சிறுமைப்படுத்திய சித்திராங்கியை இதோ ஹதம் செய்கி றேன். உன்னைக் கடிந்து பேசி முடவனை மணக்கும்படி வற் புறுத்தின என்னையும் சிரச்சேதம் செய்துக் கொள்கிறேன். உன் கடிதத்திலிருந்த பாட்டால் என் சுபுத்தி பாதி வந்தது. இந்த முடவனைக் கண்டதும் முழுபுத்தியும் வந்து விட்டது. ஹா! உன்னை உயிருடன் நான். இனிக் காண்பேனா?மோஹனா மோஹனா !
ராகம்: நாதநாமக்ரியை.
கண்மணி யுன்னைவிட்டுக் கலங்கியே நிற்றல் என்னோ பெண் மணியுன்னை நானும் பிறகினியென்று காண்பேன் நன்மணி யுனைத்துறந்து நானிலந்தன்னில் யானும் கண்மணி யிழந்து நிற்கக் காலமோ எனக்குக் கண்ணே.
(மூர்ச்சித்துவிழ மந்திரி அரசனை ஒரு சோபாவின் மீது படுக்க வைக்கிறான். மற்றவர்க ளெல்லாரும் திகிலடைந்து வெளியில் போய் விடுகிறார்கள். சித்திராங்கிப்ரவேசித்து தாதி களால் மந்திரியை அப்புறப்படுத்திவிட்டு மெல்ல அரசன் பக் கலில் நிற்கிறாள்.)
சித்:-(தனக்குள்) ஐயோ! படுமோசம் கெடு நாசம் வந்து விட்டதே. இந்தக் கிழத்துக்கு எவ்வளவோ உப தேசஞ் செய்து என் மருமகன் நொண்டி பைத்தியம் என்பதைக் காட்டாமல் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பா டெல்லாம் செய்தும் அந்தப்பாவி சாணக்கியனாலேயே கெட்டு விட்டது. நான் செய்ததெல்லாம் அரசனுக்கு நன்றாய் விளங் கிவிட்டது. இனி என் மந்திரம் ஏறுமா? ஈசா!