பக்கம்:இந்திர மோகனா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

இந்திர மோஹனா

குண :- (தூக்கத்தில்) ஆ என் கண்ணே மோஹனா மோஹனா !

சித்:- (குணசேனன் முகத்தில் பன்னீர்தெளித்துத் தெளியவைத்து) நாதா ! அவள்தான் ஒடிவிட்டாளே. இன் னும் அவளை ஏன் தூக்கத்திலுங்கூடக் கூப்பிடுகிறீர்கள்?

குண:-(கண்திறந்து உக்ரகத்தோடு) சிச்சீ. துஷ்டே. பிரஷ்டே. ஜ்யெஷ்டே. உன் மாயவலையில் சிக்கச்செய்து, சித்தத்தை உன் ஸ்வாதீனப்படுத்தி என் கண்ணைக்கொன்று என்னை இக்கதிக்கு ஆளாக்கின படும்பாவியே ! என்னெதிரில் நில்லாதே. என்முன் நின்றால் உன்தலையை வாங்கிவிடுவேன். போ வெளியில். (எழுந்து அவளைக் கழுத்தைப்பிடித்துத்

தள்ளுகிறான்.)

விதூ :- (பிரவேசித்து) அரசே வேண்டாம். பொறும். பொறும்.

குண:- ஆ மோஹனா !

(வேலவா வடி வேலவா யென்ற மெட்டு.)

மோஹனா வென்தன் மோஹனா வுன்னைக் காணாமல் எவ்விதம் புவியி லிருப்பேன்நான்.

தேகம் பதறுதே பாகாயுருகுதே பாவை யுன்னைப் பிரிந்து

படுந்துயரமதைப் பகரவும் போகுமோ.

மேதினியிலுன்னை மேன்மை செய்யாமலே இளையவள் மொழியாலே

(மோ)

இகழ்ந்ததையாவும் பானெண்ணிப் புலம்புகின்றேன். (மோ) ஆ ! பூவின் மணம் குன்றிய பிறகு நான் வருந்தி யாது பயன்? நீ சென்ற இடத்திற்கு நானும் வந்தாலொழிய என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/121&oldid=1559589" இலிருந்து மீள்விக்கப்பட்டது