பக்கம்:இந்திர மோகனா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

105

மனம் நிலைக்காது. ஆ! மோஹனா ! மோஹனா ! (மறுபடியும் மூர்ச்சித்து விழுகிறான்.)

சித் - (தனக்குள்) ஐயோ! இந்தக்கிழம் எப்போதும் மோஹனாவென்று பிதற்றுகிறதே. இனிநான் என் செய் வேன்? பாவி சாணக்கியனாலேயே இப்படியாயிற்று. அவன் காசமாய்ப்போக. (கைவிரலை நெட்டிமுறிக்கிறாள்.)

வி தூ: (ஏளனமாய் நகைத்துக்கொண்டு) உம். யாரை வைது என்னபயன் ? ஆராய்ந்துச்செய்யாதது தீராத்துயராய் முடிந்தது. இனி என் செய்வது?

சித்திராங்கி வெட்கித் தலைகுனிந்து நிற்க திரைவிழுதல்.)

இரண்டாவது களம் முற்றிற்று.

மூன்றாவது அங்கம். மூன்றாங்களம்.

இடம்: காடு.

காலம்: மாலை.

மோஹனா:- (மெலிந்த நடையுடன் பிரவேசம்.)

" போரேனிதோ போரேனிதோ" மெட்டு).

போரேனிதோ போரேனிதோ.

பரதேசியாய்ப் போரேனிதோ

காக்கவேணும் கருணாநிதே

கானத்தில் செல்லும் என்னை

பாரேன்இனி என்னையனை

பற்பல அரசர்போற்றும்

மன்னன்வயிற்றில் பிறந்தும்

மனந் தவிக்கலானேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/122&oldid=1559590" இலிருந்து மீள்விக்கப்பட்டது