பக்கம்:இந்திர மோகனா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

இந்திர மோஹனா

ஹா ! நேற்று நடந்த சம்பவங்களை நினைத்தால் என் ஹா! னெஞ்சு பகீர் என்கிறது. அச்சித்திராங்கியின் பேச்சு எவ் வளவு கர்ண கடூரமாயிருந்தது! அவள் வயிற்றில் நான் பிறந் திருந்தால் என்னை அம்முடவனுக்குக் கலியாணஞ்செய்ய மன மொப்புவளா? அவன் முடவனென்கிறது இதற்குமுன் தெரியாமலிருந்தாலும் நான் நேற்று விவரமாய் எழுதிய கடி தத்திலிருந்தாவது என்தந்தை தெரிந்துகொண் டிருக்கமாட் டாரா? அப்படியிருந்தும் எவ்வளவு கடினமாய் எனக்குப்பதில் எழுதினார்? மந்த பாக்கியவதியான யான் ஏன் இப்புவியில் பிறந்து, பெற்றதாயை யிழந்து, தந்தையால் மனமுடைந்து,. பெருந்துயரில் மூழ்கவேண்டும்? கருணாகரா! அண்டசரா சரத்தையுமுண்டுகளித்த உரகசயனா ! இப்பேதைக்கு இவ் வித கஷ்டம் வைப்பது நின்கருணைக் கழகோ? அன்று எனக்கு ஒரு நிமிஷம் சேவைதந்து மறைந்த உத்தமனைச் சேரும்படியாவது செய்யலாகாதா அவரைக் கண்டபின் அவரது திருமுகம் என் கண்களைவிட்டு சற்றேனும் நகர வில்லை. அவர் அன்று சென்ற மாதிரியைப்பார்த்தால் கானக வாசியைப்போலவிருந்தது. இரவிலிருந்து நான் காட்டிலலைங் தும் ஒரு மனுஷ்யரையும் காணவில்லை. ஈசா ! இந்நிர்மா நுஷ்ய மான காட்டில் யாதுமறியா இளம்பாவையாகிய நான் கலங்கு வது நின் திருவிளையாடலோ?

ராகம்: கமாஸ். தாளம்: ரூபகம்.

கானகத்தில் நானலைந்து கதறவிதிவசமோ? மாநிலத்தில் மங்கையாகி வளர்ந்ததின்பயனிதுவோ? யாருமற்றபேதையாகி யலைந்துநிற்கவும் விதியோ? என்மனத்தைக்கொள்ளை கொண்ட எந்தலைநானென்று

[காண்பேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/123&oldid=1559591" இலிருந்து மீள்விக்கப்பட்டது