பக்கம்:இந்திர மோகனா.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

107

ஆ ஆ! என்ன கஷ்டம்! பொழுதுபோய்விட்டது. இனி யான் என் செய்வேன்? என் மனதைக் கவர்ந்த மன்னா! என்னுயிரை விடுவதற்குள் மற்றொருமுறை உமது தரிசனம் கிடைக்குமென்று எண்ணினேன். அதற்கும் கொடுத்து நேற்றிரவே பிராணத்தியாகம் செய்வதற் குத் துணிந்து புறப்பட்டவளுக்கு எங்கும் ஒரு சிறிய குட் டைகூடக் காணவில்லை.

வைக்கவில்லை.

ராகம்: ஸஹானா.

பாவியினுரைமாய்க்கப் பற்பலவழிகள்பார்த்தும் ஆவியோ நீங்கவில்லை அப்பனேஅருளுtதோ வாவியும் கண்ணுக்கெட்டா வகையதுசெய்திட்டாயோ தாவிடுமாக்கள்கொல்லாத் தகையதற்கேதுவேதோ?

விலங்குகள் விலக்கிய பாவியை நாமும் சேர்த்துக்கொள் ளக்கூடாதென்று கிணறுகளும் குளங்களும்கூடக் கண்ணுக் கெட்டாமல் விலகுகின்றனவே. ஆ ! என்ன இது ! என்னை யுமறியாமல் என்னவோ செய்கிறது. தலை சுற்றுகிறது; கண் சுழலுகிறது; தாகம் மேலிடுகின்றது; இத்தருணம் எனக்குத் தண்ணீர் எங்குக் கிடைக்கும் ? மயக்கம் மேலிடு கின்றது. உயிர் தத்தளிக்கின்றது. ஈசா! (முர்ச்சித்துக் கீழே விழுகிறாள்.)

(அமாவாசை, டமார சிங்கன் என்றகள்ளர் குடிவெறியா லாடிக்கொண்டே பிரவேசித்தல்.)

டமா:

(தந்தானமடி மெட்டு.)

கொண்டானத்துக் கொண்டானடித்து

உண்டேன் மொந்தைக்கள்ளு

கொண்டானுமடித்துக்கொண்டு வந்தேன்கானகத்தில்

யப்பாடாவந்தேன் கானகத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/124&oldid=1559592" இலிருந்து மீள்விக்கப்பட்டது