108
இந்திர மோஹனா
மாலைப்பொழுதினிலே மன்னாரன்வரத்தால் மாரியாத்தாபாதம் போற்றிவந்தேனேசரத்தால். பாரினிலென் பேரைக்கேட்டால்
பதறிவிழுவரே பக்காத்திருடன்
டமாரசிங்கன் வந்தேன் கொண்டாடி
களவாடவந்தேன் கொண்டாடி.
டேய் அண்ணே !
என்னாடா
வுண்ணம் ஆட்ரே?
வொனக்கு கள்ளு போதாதா என்ன? திரும்பிப்பார்டா.
அமா:-டேய் ! டுரோய், டுரோய், தம்பி! வாயாலே குடிச்சகள்ளு | கண்ணாலே எட்டியெட்டிப் பாக்குதுடோய். கண்ணை தொரக்கப் போவலேடா தம்பி! நான் இப்போ எங்கே இக்கிறேன் தெரியுமா? மானத்லே பறக்ரேனே. நீயும்வாடா கூட போலாம். ஹி, ஹி, ஹி.
டமா,- என்னாண்ணே! சிறிக்கிரே. என்ன ஷேதி ? அமா.-இத்ரோய். நானு சுத்ரேண்டா. (எழும்பிக் குதிக்க மரக்கிளையில் தலைமயிர்மாட்டிக் கொள்ள) டேய் தம்பி பூட்டேன். பூட்டேன். ஒடியா. ஷெத்துப் பூட்டேன். டமா:-அண்ணே! நானும் தட்டாமலே சுத்ரேண்ணே என்னை சும்மா கூப்டாதே. (ஆடுகிறான்.)
அமா:-(பாடுகிறான்)
(மானா மதுரையிலே யென்றமெட்டு)
ஏண்டா தம்பி டமாரசிங்கம் என்மயிரல்லவோ மாட்டிகிச்சு எழுந்துவந்து தயவுசெய்து என்னையெடுத்து விடுடாதம்பி. டமா:-ஏண்டா அண்ணாத்தே! என்ன ஊசலாட்ரே.
பேஷ் ஹி ஹி (நகைக்கிறான்) நல்லா ஆடுண்ணே.