பக்கம்:இந்திர மோகனா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

109

அமா:- அடே பயலே ! என்

தலைமாட்டிக்கிச்சூணா

சும்மா யிருக்கையா? தூக்கவாடா.

ஷை மெட்டு.

மாமரக் கிளையிலே மண்டையல்லவோ மாட்டிக்கிச்சு

என் மயிரை நீ வாங்கிவிட்டால் உனக்கு

வேண்டிய பொருளுந் திருடித்தரேன்.

டமா:- -அண்ணே ! எறங்கு.

(கையைப் பிடித்துத்

தூக்கிவிட இருவரும் குதித்துக் கொண்டே) அண்ணே! இன்னிக்கி எந்தவூருக்குத் திருடப் போவலாம்.

அமா:- போய்கிணே யிருந்தா ஆட்டெடத்லே கொள்ளை யடிக்கலாம். (இருவரும் ஓடுகிறார்கள்.)

டமா:- (திரும்பிப் பார்த்து) டேய் டேய் நல்ல அதிஷ் டம்டா இன்னிக்கி. இதோபாரு. இதோபாரு. (மோஹனாவைக் காட்டி) வா அண்ணே ! எவ்ள அயவுபாரு. கடுவவா அப்ரம் அவமுயிச்சுகுவா. ஒடியா தூக்கிக்கிணு பூட்லாம்.

!

அமா:- (அருகில் வந்து உற்றுப்பார்த்து) அடேடேய் ! இது பேயோ பிசாசோடா. இத்தெப்பாத்து சும்மாமயங்கரே. டமா:- டேய்! அம்பிட்டு தெரியாதா நேக்கு ? அவ பொம்ப்ளே தாண்டா, தூங்கரா. வாடா, தூக்கிணு பூட்லாம். இருவரும் மோஹனாவைத் தூக்க அவள் விழித்துக் கொள்கிறாள்.)

மோஹனா :- ஹா ! இது என்ன! யாரோ இரண்டுபேர்

என்னைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

என்ன செய்வேன்? பயமாயிருக்கிறது.

ஐயோ ! நான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/126&oldid=1559594" இலிருந்து மீள்விக்கப்பட்டது