110
இந்திர மோஹனா
(ஐயையோ ஜானகியே யென்றமெட்டு) ஐயோ நானென்ன செய்வேன் - பாழும் கள்ளர்கள் என்னைத் தூக்கிச்செல்கின்றாரே வையகந்தன்னிலே வேந்தன் வயிற்றிற் பிறந்து வெறியர் தூக்கலானேனே.
ஆபத்துக் காலத்தில் அணைக்க ஒருவருண்டோ பேதையென் தனக்கு.
ஆ! ஜகதீசா ! எங்கோ தூக்கிச் செல்கின்றார்களே ! திமிறிச் செல்லவும் கூடாமல் கெட்டியாய்ப் பிடித்துச் செல் கிறார்கள். ஐயையோ! என் செய்வேன் ஈசா!(திரைவீழ்தல்.) மூன்றங்களம் முற்றிற்று.
மூன்றாவது அங்கம். நான்காவது களம்.
இடம் - காட்டில்திருடன் வீடு
காலம் - இரவு.
(மோஹனா வீற்றிருந்தபடி பிரவேசம்.) ராகம் - நீலாம்புரி.
காரிருள் தன்னில் யானும் கலங்கியே நிற்றலேனோ ஆருளர் களைகணம்மா அரங்கனே அருளுவாயே பாரினில் உன்னையல்லால் பற்றெனக்கொருவருண்டோ சோரர்களிடத்தினின்றும் துணையுறத்தப்பவைப்பாய்.
மோஹனா:- கருணாகரா ! சிற்றன்னை விளைவித்த அல் லலைப் பொறுக்கமாட்டாமல் உயிரை விட்டுவிடலா மென்று வெளிவந்தால் இப்போது திருடன்கையில் அகப்பட்டு சசிக்க முடியாத கஷ்டங்களை யனுபவிக்க வைத்தாயே ? இது நின்