பக்கம்:இந்திர மோகனா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

111

கருணைக்கழகோ ? பட்ட.காலிலே படும் என்றபடி கஷ்டங்கள் ஒன்றன்பின் னொன்றாய் என்னைத் தொடரவும் வீதியோ ! என்னுயிர் போவதற்குள் என் பிராண காந்தரை ஒரு முறை யாகிலும் காண்பேனோ ?

ஆபத்பாந்தவா ! என்னை இக்கஷ்டத்தினின்று விடு வித்து என் கோரிக்கையை நிறைவேற்ற உன்னால் முடியாதா? உன் கண் திறந்து பார்த்தால் எது தான் ஆகாது. அநாத ரக்ஷகனென்ற பெயர் உனக்கிருப்பதை நீ கைவிடலாகுமா? என் போன்ற பேதையை ரக்ஷிக்க ஏன் தாமதமாக வேண்டும்? (திரும்பிப் பார்த்து) ஐயோ! அதோ திருடன் வந்து விட் டானே. அபலை யான் என் செய்வேன்? தீனபந்து ! நீ தான் என் கற்பைக் காக்கவேணும். (டமார சிங்கன் பிரவேசிக் கிறான்.)

டமா:-ஏண்டி குட்டி ! என்னடி பேசிகிட்டே யிக்கரே. ஒனக்கு என்ன வோணம் சொல்லு, வாங்கியாந்து தாரேன். இன்னம் வொன் மனசு திரும்பலையா? யென்மூஞ்சிபாரு. எம்பிட்டு அயவாயிக்கரேன். வாடி யென்கிட்ட

மோஹனா:-அடேதுஷ்டா ! என்னிடம் பேசாதே யென்று எத்தனைதரம் சொல்வது. என்னை வருத்தினால் நீ நாசமடைந்து அடியோடுமாண்டு போவாய். சீ ! தூர விலகு நாயே !

டமா:-அடி! நீ யென்னத்திட்டினாலும் அது ரொம்ப அயவாயிக்குது. மதனசுந்தரி! என்னை ஏமாத்தாதே. உன்னே நல்லபதவிலே வெப்பேன். (மோஹனாவின் அருகில்

போகிறான்.)

மோஹனா :-(எழுந்து விலகிச்சென்று) அடே சண் டாளா! என்னெதிரில் நில்லாதே. எட்டிச்செல். பெண் பாவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/128&oldid=1559596" இலிருந்து மீள்விக்கப்பட்டது