பக்கம்:இந்திர மோகனா.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

இந்திர மோஹனா

பொல்லாது. (உயரப்பார்த்து கைகூப்பிக்கொண்டு) ஆபத் பாந்தவா! அநாதரக்ஷகா! என்னை இப்பாவி பெண்டாளப் பார்க்கிறானே. இப்படி என்னைத் தவிக்க விட்டுவிடலாமா? பாஞ்சாலியை துச்சாசனன் மானபங்கம் செய்தபோது நீர் அவளைக் காக்கவில்லையா? எளியேனை இப்பாவியின் கையி லகப்பட விடலாமா? என் கற்பை யிழப்பதைவிட. 'உயிரை யிழந்துவிடலாம்.

டமா:-இன்னம் ஒனக்கு தயவு பறக்கலையா ? (பப்பளபள மெட்டு.)

தள தள தள தள தளவென்னும் தங்கக்கொடியாளே கண்ணாட்டி தங்கக் கொடியாளே

ராஜாத்தி தங்கக்கொடியாளே

உன்தன்நெஞ்ச மின்னு மிளகவில்லையோ ஏந்திழையாளே! மினுமினுமினுமினுமினுமின்னும் மின்னல் கொடியாளே கண்மணியே மின்னல் கொடியாளே

பெண்மணியே மின்னல் கொடியாளே

உன்னைக்காண வெகு ஆவலுடன் வந்துவிட்டேனே,

(மோஹனாவை ஆலிங்கனஞ் செய்துகொள்ள கையை விரித்துக்கொண்டு போகையில் பிடாரி பிரவேசித்து அவனை நையப்புடைத்து, தலைமயிரைப்பிடித்து யிழுக்கிறாள்.)

பிடாரி :- தா ! இப்போதெரிஞ்சிது ஒன் மோசமெல் லாம். யெனக்குத் தெரியாதே இந்தபொம்பளே யெக்கொ ணாந்து ஒன் வெப்பாட்டியாயா வெச்சிகினு இக்கரே? கயுதே! வெக்கமாயில்லே வொனக்கு? (அவன் கன்னத்தின் மேல் பளீ ரென்று அரைந்து) தா! இன்னமே இந்த மாதிரி சேஞ்சயானா ஒன் மண்டையைப் பொளந்தூடுவேன். யிந்தப் பொண்ணே நானே எங்கேயானா கொண்டு வுட்டூட்ரேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/129&oldid=1559597" இலிருந்து மீள்விக்கப்பட்டது