பக்கம்:இந்திர மோகனா.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




றாள்.)

இந்திர மோஹனா

113

(அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகி

மோஹனா:- நல்லகாலம். சமயத்தில் வந்து என் கற் பைக் காப்பாற்றினாள் புண்யவதி. அவள் கடைசியில் சொன்னபடி என்னை வெளியிற் கொண்டுவிடுவாளோ என் னவோ, தெரியவில்லை. என்ன இவ்வளவு களைப்பா யிருக் கிறது? மயக்கம் மேலிடுகிறது. (படுத்துக் கொள்கிறாள். சற்று நேரம் கழித்து நித்திரையில் வாய் பிதற்றுகிறாள்) மஹாலக்ஷ்மி! நானும் உன்னைப் போல் ஸ்த்ரீ யல்லவா? என் கற்புக்குப் பங்கம் நேரிடும்படி நீ பார்க்கலாமா? மானம் என் பது ஸ்த்ரீகள் யாவருக்கும் சமமல்லவா! பூலோகமாதாவா யிருக்கும் நீயே பராமுகமா யிருந்தால், வேறு யார் என் இ ரைத் தீர்ப்பார்கள்? தாயே ! என் கஷ்டத்தை நிவர்த்தி செய்யலாகாதா?

(வாய் பிதற்றல் நின்றதும் ஒரு ஜோதிகிளம்ப அதைக் கண்ட மோஹனா திடீரென்று கண் விழித்து)

! இது என்ன கனவோ நினைவோ? ஒன்றும் தெரிய வில்லை. என்னை யாரோ எழுப்பியதுபோ லிருந்தது. இவ்வி ருட்டறையில் ஜோதி எங்கிருந்து உண்டாயிற்று? என்ன ஆச்சரியம்! ஜோதியா யிருந்தது மாறி ஸ்த்ரீ ரூபம்போல் காணப்படுகின்றது. ஆ! இவள் என்னைக் காக்கவந்த கமலா சனியோ ? நான் என்ன விழித்திருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா?

(நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கனவோ நினைவோ

என்ற மெட்டு)

கனவோ ! நினைவோ ! நான் காண்பது வீணோ ! மனதிலறியவழி யொன்றுங் காண்கிலேனே.

8

(க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/130&oldid=1559598" இலிருந்து மீள்விக்கப்பட்டது