114
இந்திர மோஹனா
திருடர்கள் சென்
ன்றதும் திருமகள் வந்ததும்
சேவை தருவது போல் என் மனந் தன்னிலே.
(க)
என்ன எழில் ! எழில் ! மலையத்தனை பாவத்தில் கடுகத்தனை புண்ணியஞ் செய்தேனோ. நீலலோசனி ! என் இடர்களைப் போக்கத் தருணம் இது என்று வந்தனையோ. (இருகரங்களை யும் கூப்பிக்கொண்டு பாடுகிறாள்.)
"தாண்டவநித்யஹரி" மெட்டு. பாண்டவநேயர்பாரி கஜலக்ஷ்மி
வேண்டியேயுன்றன் மலரடிபணிந்தேன்
ஆண்டிடுவாய் என்றனை கஜலக்ஷ்மி.
(பா)
பேதையைத்தருணம் பிரியமுடன்காக்கச்
சாதகத்துடன்வந்த கஜலக்ஷ்மி
தண்டைசிலம்புதுன்ன மகரகுண்டலமின்ன
கொண்டல்வண்ணன்தேவி கஜலக்ஷ்மி.
(பா)
கருணாகரி ! அபலை யான் செய்த பிழை யாதிருந்தாலும் க்ஷமித்து அடியாளைக் காக்கவேணும்.
மஹாலக்ஷ்மி:- (அபயந்தந்து) பெண்ணே! உன் பக்திக் கும் கற்புக்கும் மெச்சினேன். இனியுனக்கு யாதொரு குறை யுமில்லை. இந்த மாயக்கல்லை எந்தத் திக்கில் எறிந்தாலும் உனக்கு வழி யேற்படும். வெளியில் போனபிறகு, தானே வழியடைந்துவிடும். (கல்லை மோஹனாவிடம் கொடுக்க அதை யவள் வாங்கிக்கொண்டு நிமிர்வதற்குள் ரூபம் மறைந்துவிடுகி றது.)
ண
மோஹனா:- ஹா! இது என்ன மாயம்? இப்பொழுதி ருந்த மஹாலக்ஷ்மி இதற்குள் எப்படி மறைந்தனள்! மறுபடி யும் எப்பொழுது. காண்பேன்? அவ்வுருவம் என் மனத்தை