பக்கம்:இந்திர மோகனா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டும்.

இந்திர மோஹனா

115

விட்டு அகலவில்லை. கள்ளன் ஒருவேளை மறுபடியும் வரு வானோ என்னவோ? அதற்குள் வெளியிற் போய்விடவேண் தேவி! உன் பாதம் போற்றி நீ கொடுத்த கல்லை எறிகிறேன்.(கல்லைச் சுவரின்மேல் எறிய அது படீரென்று வெடித்து வழி விடுகிறது. மோஹனா வெளியே வந்ததும் முன்போலாய்விடுகிறது.) அம்பிகா! உன் கடாக்ஷத்தினால் கள்ளன் கையினின்றும் தப்பினேன். கமலாயதாக்ஷி ! இனி என் மனத்தில் நாடிய புருஷனை யடைவதற்கு நீதான் கிருபை புரியவேண்டும். உன்னை நம்பி இதோ போகிறேன்.

நான்காவது களம் முற்றிற்று.

(போகிறாள்.)

நான்காவது அங்கம். முதற்களம்.

இடம்;காடு.

காலம்: மாலை.

(மோஹனா விசனத்தோடு பிரவேசம்.)

(மருலுகொன்னாதிரா என்ற ஜாவளி மெட்டு.)

ராகம்: கமாஸ். தாளம்: ஆதி.

பல்லவி.

மன்னா உம்மைத்தேடியே மாதுயான் வருந்துகின்றேன்

அநுபல்லவி.

பன்னகசயனனைப் பணிந்து இவ்வேளையில்

(10)

(10)

சரணம்.

கொடியவனர் தன்னிலே கொற்றவனே யும்மை

அடிபணிந் தென்தன் உள்ளம் அன்பனே களிக்குமோ.

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/132&oldid=1559600" இலிருந்து மீள்விக்கப்பட்டது