116
எ
இந்திர மோஹனா
ஆ! திருமகளின் அருளினால் அக்கொடிய கள்ளனது கட்டைக் கடந்தேன். அப்படியே என்மனத்தைக் கவர்ந்த காந்தனின் கட்டிலடங்குவேனோ? "இனி உனக்கு யாதொரு குறையுமில்லை " என்று சீதேவி சாற்றினதால் என்மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு என்மணவாளனைத் தேடுகிறேன். இதுவென்ன ! என் இடக் கண் துடிக்கிறது! இது ஒரு நற்சகுனபன்றோ ! இதையெல்லாம் கவனித்தால் என எனக்கும் ஒருநல்லகாலம் பிறக்கும்போலிருக்கிறது. ஐயோ ! பசிதாகம் மேலிடுகிறது. இக்காட்டில் எங்கிருந்து எனக்கு உணவு: கிடைக்கப்போகிறது? (சுற்றிப்பார்த்து ஒரு மூலையை உற்று நோக்கி)என்ன, அம்மரப்பொந்தில் மூட்டைபோல் காணப் படுகின்றது? எவனாவது விறகு தலையனது சோற்று மூட்டை யாயிருக்குமோ? எதற்கும் எடுத்துப்பார்ப்போம். (மூட் டையை எடுக்கிறாள்.) சீ ! அயலாருடையதை நான் எடுக்க லாமா? (சற்று யோசித்து) ஆபத்திற்குத் தோஷமில்லை யென்றபடி இப்பொழுது எனக்கிருக்கும் பசிக்கு இதில் ஏதா வது உணவிருக்கிறதா பார்க்கிறேன். (மூட்டையை யவிழ்க்க). ஹா ! இது என்ன ஆச்சரியம் ? இதில் ஒருபடமும் சில ஆப ரணங்களும் தான் இருக்கின்றன. (படத்தை உற்றுப்பார்த்து) என்ன இது ! கனவோ ! நினைவோ ! நம்மனத்தில் பதிந்திருக் கும் உருவம் இதிலுமிருக்கிறதே. நம்பத்தக்கதாயில்லை. நான் கண்டபோது சாதுவைப்போலக் காஷாயந்தரித்துச் சென்ற வர் இதில் ஒரு இளவரசரைப்போல் காணப்படுகிறாரே. ஏதா வது காரணத்தால் மாறுவேஷமணிந்து சென்றாரோ? நான் பெண்ஜன்ம மெடுத்தது இன்றுதான் பாதி ஸபலமாயிற்று. அவர்தான் இவர் என்பதற்குச் சற்றேனும் ஐயமில்லை. அவ- ரது திருமுகத்தை எப்பொழுது காண்பேனென்று ஏங்கி யிருந்த எனக்கு இப்படத்தையாவது காணும்படி திருமகள்