பக்கம்:இந்திர மோகனா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

117

அருள் புரிந்தாளே. ஆ! என்ன கம்பீரம் ! என்ன வசீகரம் ! கண்காள்! நீங்கள் இத்தனை நாட்களாயலைந்ததற்கு இன்று இப்படத்தைக்கண்டு ஆனந்திக்கின்றீர்களே; அம்மன்னனை நேரில் கண்டு எப்பொழுது ஆனந்திப்பீர்கள்? கைகாள்! நீங்கள் அவரது படத்தைத் தொடும் பாக்கியம் இன்று பெற் றீர்களே; அவரைநேரில் ஆலிங்கனஞ்செய்துகொள்ள எப் பொழுது பாக்கியம் பெறப்போகிறீர்கள்? (படத்தைப்பார்த்து) பிராணநாதா! நீரோ மன்னன் என்பதற்கு ஐயமில்லை. நானோ இக்கதியிலிருக்கிறேன். என்னை நீர் ஒருகால் கண்டாலுங்கூட

என்னை

அங்கீகாரஞ்செய்துகொள்வீ ரென்பது

என்ன

நிச்சயம்? ஆகையால் உமது படத்தையாவது முத்தமிட்டு விட்டு நான் உயிரை விடுகிறேன். விடுகிறேன். (படத்தை முத்தமிடப் போசு) சீ! என்ன எண்ணம் எண்ணினேன்? அவர்மனத்தை நேரில் அறிந்துகொள்ளாமல் இவ்விதம் செய்வது தகுமா (யோசித்து) இதில் என்ன தவறு? நான் மனத்தில் வரித்தவர் இவரே. அவர் அன்புடன் என்னை ஏற்றுக்கொள்ளாவிடில் நான் உயிருடனிரேன். என்மனமார அவரை எப்பொழுது என் கொழுநனாக வரித்தேனோ அவரது படத்தை முத்த மிட்டாலென்ன? (முத்தமிடுகிறாள்). ஈசா! அவரே இவ் வாறு செய்ய என்பாற் கருணைபுரிவாயே. (நேபத்யத்தில்) ஐயோ! இது யென்ன எயவா யிக்கிது.ஏ நாகா! நம்ப கைக்கு யெட்டினது வாய்க் கெட்டலேயே. பசியாலே சாவு

ரோமே.

மோஹனா:-ஆ ! இங்கே யாரோ வருகிறாப்போலிருக் இந்தப்படத்தையும் ஆபரணங்களையும் மறைத்துக் கொண்டு சற்று விலகிநின்று யார் என்பதைக் கவனிப்போம்.

கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/134&oldid=1559602" இலிருந்து மீள்விக்கப்பட்டது