118
இந்திர மோஹனா
பாம்புப் பிடாரன்:- (பிரவேசித்து) அம்மா ! நானு புள் ளேக்குட்டிக் காரன். வவுத்து பொயப்புக்காவ பிச்செ யெடுத் துத் துன்றவன். யிந்த காட்லே ஒரு மாராஜா மூட்டே. ஒன்னு கொடுத்தாரு. அதெ இந்த மரப்பொந்திலே வச்சூட்டு களேப்பாலே படுத்துக்குணு தூங்கிட்டேன். ஏந்து பாத்தா மூட்டெயேக்காணம். தர்மலட்சிமி ! நீங்க பாத்திருந்தா சொல்லுங்க; பட்டினியா சாரேன்.
மோஹனா: அப்பா ! எனக்கொன்றும் தெரியாது. அதி ருக்கட்டும். யாரோ மஹாராஜா உனக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தா ரென்றாயே, அதில் என்ன விருந்தது? அவர் எங்குச் சென்றார்?
பாம்புப் பிடாரன்:- அம்மா ! அந்த மூட்டேலே என்ன யிருந்துதுனு நானு பாக்கல்லே. ஒதயத்துக்கு முன்னே இங்கே ஒரு சாது குந்திண்டிருந்தாரு. அவரே பிச்செ கேட்டேன். அவர் ஒரு மூட்டெயெ குடுத்தாரு; அத்தெ தான் யிங்கே வெச்சேன். அதைக்காணோமே. ஐயோ ! நானு என்ன சேவேன் ? (அழுகிறான்).
மோஹனா :- (தனக்குள்) ஆ ! இவன் சொல்வதைப் பார்த்தால் என் பிராணநாதர் தான் இந்த மூட்டையை இவ னுக்குக் கொடுத்தார். என்று தோன்றுகிறது. ஐயோ! பாவம். வயிற்றுக் கில்லாமல் அழுகிறான். நல்ல காலம் அவன் மூட்டையை யவிழ்த்துப் பார்க்கவில்லை. இவனால் தானே என்நாதரின் படம் எனக்கு அகப்பட்டது. அவனுக்குத் தகுந்த பரிசளித்து அனுப்புகிறேன். (பிரகாசமரிய்) அப்பா ! நீ மிகவும் கஷ்டப் படுவதால் இதோ இந்த முத்துமாலையைக் கொண்டு விற்று சாப்பிடு. (முத்துமாலையைக் கொடுக்க அவன் வாங்கிக்கொள்கிறான்).