பக்கம்:இந்திர மோகனா.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

119

பாம்புப்பிடாரன்:- அம்மா ! நீங்க சேனநாளேகி நன்னா வாயனும். சாமி வொங்களெக் காப்பாத்துவாரு ; நான் போய் வாரேன். (போகிறான்).

மோஹனா:- ஆ! ஈசன் மாயத்தை யாரா லறியக்கூடும்? எல்லாம் அவனது திருவிளையாடலே. அம்பாள் கிருபையால் இப்படம் கிடைத்தது. அவளது பூர்ணகடாக்ஷ மிருந்தால் என்நாதரை நான் சீக்கிரம் அடைவது திண்ணம் . ஐயோ! தாகம் அதிகரிக்கிறதே. (படத்தைப் பார்த்து) ஆ ! பிராண நாதா!நான் இங்கு அலைவது போல் நீர் எங்கு அலைகின்றீரோ? தாகத்தால் தவிக்கிறீரோ? பசியால் பரிதவிக்கின்றீரோ? கால் நடையால் களைத்தீரோ? ஒன்றும் தெரிய வில்லையே. கருடவாகனா ! நீர் தான் என் காந்தரைக் காக்கவேணும். ஆ ! என்ன இது ? தாங்க முடியா த மயக்கம் மேலிடுகிறது. இப்பாறையின் மீது சற்றுப்படுத்து இளைப்பாறுவோம். (படத் தைப்பார்த்து) பிராணேசா! நான்படும்கஷ்டங்களை மறைக்கச் செய்த வுமக்கு நான் என்ன பிரதியுபகாரம் செய்வேன் இதைத்தவிர (முத்தமிடுகிறாள்). நான் உம்மை நேரில் காணும் பாக்கியத்தை யடைவேனோ ?

ராகம். காபி.

கண்ணா லினியவரைக் காண்பேனோ பேதையேன் பெண்ணாய்ப் பிறந்த பெருமைதான் - மண்ண தனில் இன்றோடு நீங்கியதோ ஈசனே உமதடியை

நன்றாய்ப் பணிந்திட்டேன் நான்.

ஈசா ! நீ தான் என்னைக் காத்து ரக்ஷிக்க வேண்டும். ஆ! கண் இருட்டுகிறதே. (கையில் படத்தைப் பிடித்தபடியே நித் திரை போகிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/136&oldid=1559604" இலிருந்து மீள்விக்கப்பட்டது